கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த பிரபல பாடகி கனிகா கபூர் குணம் பெற்று வீடு திரும்பினார்..!Kanika kapoor cured in corona

சீனாவில் தொடங்கிய கொரோனோ வைரஸின் கோரத்தாண்டவம் இன்று பல நாடுகளிலும் பரவி வருகிறது. இதுவரை இந்நோயால் உலகம் முழுவதும் 12 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்நோயால் இதுவரை 60 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸானது இந்தியாவிலும் கோரத்தாண்டவம் எடுத்து வருகிறது. இந்தியாவில் மட்டும் இதுவரை 4000க்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 100க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர்.

Kanika kapoor

இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த உத்திரப்பிரதேச பிரபல பாடகி கனிகா கபூர் குணம் பெற்று வீடு திரும்பியுள்ளார். கனிகா கபூருக்கு 6 வது முறையாக எடுக்கப்பட்ட பரிசோதனையில் பாதிப்பு இல்லை என்று வந்ததை அடுத்து மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.