அதிர்ச்சி! திடீரென ரயில்வே பாலத்தின் தாங்கு சுவர் இடிந்து ஆற்றில் விழுந்த ரயில்..! ரயில்வே துரையின் அவசர நடவடிக்கை!



kangra-rail-bridge-collapse-video-viral

நாட்டின் பல பகுதிகளில் மழை தாக்கம் நீடிக்கும் நிலையில், ஹிமாச்சலப் பிரதேசத்தில் நடந்த இந்த ரயில் விபத்துக் காட்சி நாடு முழுவதும் பரபரப்பை உருவாக்கியுள்ளது. கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ரயில்வே பாதுகாப்பு மற்றும் கட்டமைப்பு நிலைத்தன்மை மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளது.

ரயில் சென்றுகொண்டிருக்கும்போது தாங்கு சுவர் சரிவு

காங்ரா பகுதியில் கனமழை பெய்துகொண்டிருந்த வேளையில், ரயில் ஒன்று பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக பாலத்தின் தாங்கு சுவர் இடிந்து விழ, அதை கண்ட பொதுமக்கள் உடனடியாக ரயிலை நிறுத்துமாறு கூச்சலிட்டனர். அதிர்ஷ்டவசமாக பாலம் முழுவதும் சரியாமல் இருந்ததால் ரயில் கீழே விழுவது தவிர்க்கப்பட்டது.

இதையும் படிங்க: கனமழை எச்சரிக்கை! தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை...? வந்தது வானிலை அலர்ட்....!

வைரலாகும் திகில் வீடியோ

சுவர் சரியும் அந்த காட்சி இணையத்தில் பரவிவரும் நிலையில், பலரும் இந்த நிகழ்வை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். ரயில் நதியில் விழாமல் தப்பியிருப்பதே பெரும் அதிர்ஷ்டமாக கருதப்படுகிறது.

ரயில்வே துறையின் அவசர நடவடிக்கை

இதுகுறித்து அதிகாரிகள், தொடர்ச்சியான கனமழையின் தாக்கத்தால் தாங்கு சுவர் பலவீனமடைந்து இடிந்ததாக தெரிவித்தனர். சம்பவத்தைத் தொடர்ந்து அந்தப் பாலத்தின் வழியாக ரயில் சேவைகள் உடனடியாக நிறுத்தப்பட்டு பாதுகாப்பு ஆய்வுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. உயிரிழப்பு ஏதும் இல்லாததால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மழைக்காலத்தில் அதிக கவனம் அவசியம்

கனமழை மற்றும் வெள்ளத்தால் பாலங்கள், சுரங்கங்கள், தடங்கள் போன்ற ரயில்வே கட்டமைப்புகள் பாதிக்கப்படுவதற்கான அபாயம் அதிகரித்து வரும் நிலையில், இந்தச் சம்பவம் எச்சரிக்கை மணி அடித்துள்ளது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

மழை சீசனில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டிய அவசியத்தை இந்த காங்ரா சம்பவம் மீண்டும் வலியுறுத்துகின்றது.