அரசியல் இந்தியா

சபாஷ்! அப்படி வாங்க.. நடிகர் ரஜினியை புகழ்ந்து தள்ளிய நடிகர் கமல்! என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா!

Summary:

kamal wishes tweet for rajinikanth

டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடந்து வரும் போராட்டம் கலவரமாக மாறியதால், இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனைதொடர்ந்து இன்று செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, டில்லியில் ஏற்பட்ட வன்முறை கண்டிக்கத்தக்கது. குடியுரிமை திருத்த சட்டத்தால் இஸ்லாமியர்கள் பாதிக்கப்பட்டால் அவர்களுக்காக முதல் ஆளாக நிற்பேன் எனக் கூறியிருந்தேன். டெல்லியில் ஏற்பட்ட வன்முறைக்கு உளவுத்துறையின் தோல்வியே காரணம். போராட்டங்களை மத்திய அரசு இரும்பு கரம்கொண்டு அடக்கியிருக்க வேண்டும்.

தொடர்ந்து பேசிய ரஜினி சில கட்சிகள் மதத்தை வைத்து போராட்டங்களை தூண்டுகின்றன. டெல்லி போராட்டத்தை மத்திய அரசு ஒடுக்கவில்லை என்றால் எதிர்காலத்தில் பிரச்சனை ஏற்படும். இது போன்ற போராட்டங்களை ஆரம்பத்திலேயே மத்திய, மாநில அரசுகள் கிள்ளி எறிய வேண்டும்  ரஜினி கூறியுள்ளார்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த்தை வாழ்த்தி சகநடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல் ஹாசன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், சபாஷ் நண்பர் ரஜினி, அவர்களே, அப்படி வாங்க. இந்த வழி நல்ல வழி. தனி வழி அல்ல, ஒரு இனமே நடக்கும் ராஜ பாட்டை. வருக, வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.


Advertisement