குண்டாக இருந்த மனைவி! இணையத்தில் தேடி ரூ. 80 ஆயிரம் மதிப்புள்ள.... திட்டம் போட்டு கணவன் செய்த அதிர்ச்சி செயல்! அடுத்து நடத்திய நாடகத்தால் அம்பலமான உண்மை!!!
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் மனைவிக்கு விஷம் கொடுத்து கொலை செய்ததாக கணவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலில் இயல்பான மரணம் போல காட்ட முயன்ற நிலையில், பிரேதப் பரிசோதனை அறிக்கையால் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. போலீசார் விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடப்பா மாவட்டம் பிராட்டூர் மண்டலம், ஈஸ்வர் ரெட்டி நகரை சேர்ந்த பத்ரிபள்ளி கிரண், எட்டு ஆண்டுகளுக்கு முன்பு பத்ரிபள்ளி பத்மாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 7 வயது மகள் உள்ளார். குடும்பம் முத்தனூரில் உள்ள தாய்மாமன் வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
இணையத்தில் தேடி விஷம் வாங்கிய கணவர்
தகவலின்படி, மனைவி உடல் பருமனாக இருப்பதாலும் அதிகமாக சாப்பிடுவதாகவும் கூறி கிரண் அடிக்கடி அதிருப்தியில் இருந்துள்ளார். இதனால், மனைவியை கொல்ல திட்டமிட்ட அவர் இணையத்தில் தேடி ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள விஷப் பொருளை வாங்கியதாக போலீசார் தெரிவித்தனர்.
கடந்த மாதம் 26ஆம் தேதி, மனைவியை தனது பெற்றோர் வீடு உள்ள ஈஸ்வர் ரெட்டி நகருக்கு அழைத்து சென்றுள்ளார். அதன்பின் 29ஆம் தேதி இரவு உணவில் விஷம் கலந்து கொடுத்ததாக கூறப்படுகிறது.
மயங்கி விழுந்ததாக நாடகம்
விஷம் உட்கொண்ட பத்மா கீழே விழுந்ததும், தலையணையால் முகத்தை அழுத்தி மூச்சுத்திணறடித்து கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன்பின், எதுவும் தெரியாதது போல பத்மாவின் குடும்பத்தினருக்கு போன் செய்து, திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துவிட்டதாக கிரண் கூறியுள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த பத்மாவின் தந்தை பெங்களூரு ராஜகுல்லைய்யா, போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விபு கிருஷ்ணா தலைமையில் விசாரணை தொடங்கப்பட்டது.
பிரேதப் பரிசோதனையில் வெளிவந்த உண்மை
இன்ஸ்பெக்டர் கொண்டரெட்டி, எஸ்.ஐ. மதுசூதன் ரெட்டி மற்றும் சீனிவாசலு உள்ளிட்ட போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். பிரேதப் பரிசோதனை அறிக்கையில் இது கொலை என உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கிரணிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது, “மனைவி குண்டாக இருந்ததும் அதிகமாக சாப்பிட்டதும் பிடிக்கவில்லை” என கூறி அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து கிரண் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.