மாணவியை காலால் எட்டி உதைத்த 16 வயது சிறுவன்... வீடியோவை பகிர்ந்து முதல்வர் அதிரடி உத்தரவு..!

மாணவியை காலால் எட்டி உதைத்த 16 வயது சிறுவன்... வீடியோவை பகிர்ந்து முதல்வர் அதிரடி உத்தரவு..!


jharkhand-boy-attacked-a-girl

16 வயது சிறுவன் பள்ளி சீருடையில் இருக்கும் மாணவியை காலால் எட்டி உதைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பள்ளி சீருடையில் இருக்கும் ஒரு மாணவியை 16 வயது சிறுவன் திரும்பத் திரும்ப காலால் எட்டி உதைக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளது.

இதனைக் கண்ட ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் வீடியோவை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டு, காவல்துறையினரிடம் சிறுவன் மீது தக்க நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.

இதனால் சிறுவனை தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக இறங்கிய நிலையில், சிறுவன் தும்கா மாவட்டத்தை சேர்ந்தவன் என்பதும், ஒன்பதாம் வகுப்பு பயின்று வந்ததும் தெரியவந்துள்ளது.

பின் சிறுவனை தேடி கைது செய்த காவல்துறையினர், மாணவியை பயங்கமாக தாக்கிய சம்பவம் தொடர்பாக பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.