பெற்றோர்கள் கவனத்திற்கு...ஜெல்லி சாப்பிட்ட 1½ வயது குழந்தை.. அடுத்த நொடியே நடந்த அதிர்ச்சி சம்பவம்..!



jelly-choking-incident-toddler-death-madhya-pradesh

மத்திய பிரதேச மாநிலம், சீஹோர் மாவட்டத்தின் ஜஹாங்கிர்புரா என்ற சிறிய கிராமத்தில் நடந்த ஒரு வருத்தமூட்டும் சம்பவம், அனைவரையும் பதற வைக்கும் வகையில் உள்ளது.

ஜெல்லி சாப்பிட்ட  குழந்தை

அந்த கிராமத்தைச் சேர்ந்த 1½ வயது ஆயுஷ் லோதி என்ற குழந்தை, ஜெல்லி சாப்பிடும்போது அது மூச்சுக்குழாயில் சிக்கியதால், உயிரிழந்தாள். சம்பவத்தன்று, வீட்டில் இருந்தபோது குழந்தை ஜெல்லி ஒன்றை சாப்பிட முயன்றது. ஆனால் ஜெல்லியின் பிசுபிசுத்த தன்மை காரணமாக, அது குழந்தையின் தொண்டையில் சிக்கி, மூச்சுத்திணறல் ஏற்பட்டு விழுந்தது. பெற்றோர் அவசரமாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதும், குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சீஹோர் அரசு மருத்துவமனையின் சிவில் சுர்ஜன் டாக்டர் ப்ரவீர் குப்தா கூறியதாவது:

“ஜெல்லி போன்ற மென்மையான மற்றும் பிசுபிசுப்பான உணவுப் பொருட்கள், சிறு குழந்தைகளுக்கு ஆபத்தானவை. இவை மூச்சுக்குழாயில் சிக்கும் அபாயம் உள்ளது. குறிப்பாக, epiglottis எனப்படும் பகுதி நன்றாக செயல்படாதபோது, இந்த ஆபத்து அதிகரிக்கிறது” என்றார்.

இதையும் படிங்க: Video : மணமேடையில் குழந்தை உடன் உள்ள மணப்பெண்! மணமகன் செய்த நெகிழ்ச்சி செயல்! வைரலாகும் வீடியோ....

இந்த துயரமான சம்பவம் அந்த கிராமத்தை மட்டுமல்லாமல், பல பெற்றோர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. குழந்தையின் குடும்பம் துன்பத்தில் மூழ்கி உள்ளது. “இது மற்ற குழந்தைகளுக்கும் நடக்கக் கூடாது. இந்த வகை ஜெல்லி தயாரிப்பு, விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும்” என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த சம்பவத்தையடுத்து, ஜெல்லி விற்ற கடை உரிமையாளர், “நான் இனிமேல் இந்த ஜெல்லியை குழந்தைகளுக்கு விக்கமாட்டேன்” என உறுதியளித்துள்ளார்.

பெற்றோர்கள் கவனிக்க வேண்டியவை:

1.3 வயதுக்குள் உள்ள குழந்தைகளுக்கு பிசுபிசுத்த உணவுகள் மிகுந்த ஆபத்தாக இருக்கலாம்.

2.குழந்தைகள் சாப்பிடும் போதெல்லாம் அவற்றின் இயற்கை தன்மை மற்றும் வயதுக்கேற்றபடியாக இருக்கிறதா என கவனிக்க வேண்டும்.

3.பிளாஸ்டிக் மூடியுடன் வரும் ஜெல்லிகள், குழந்தைகளின் பாதுகாப்புக்கு எதிரானவை என கருதப்படுகின்றன.

 

இதையும் படிங்க: அய்யோ பாவம்..கொதிக்கும் எண்ணெயை மனநலம் பாதித்த பெண்ணின் மீது ஊற்றிய டீக்கடைக்காரர்! என்ன காரணம் தெரியுமா?