இந்தியா உலகம் Covid-19

நியூசிலாந்தில் சிக்கி தவிக்கும் ஜெய்ப்பூர் தம்பதிகள்; நாடு திரும்ப உதவி கேட்டு பிரதமருக்கு கடிதம்!

Summary:

Jaipur couples struggling at expensive newzland

நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஜெய்ப்பூரை சேர்ந்த தம்பதிகள் ஊரடங்கு காரணமாக நாடு திரும்ப முடியாமல் தவிப்பதாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

நேற்று பிரதமர் அலுவலகம், வெளியுறவு துறைக்கு வந்த ஒரு இமெயிலில் ஜெய்ப்பூரை சேர்ந்த வியாபாரி பிரதீப் லோய்வால், ராஜஸ்தான் பல்கலைக்கழக பேராசிரியர் சுதீர் ராணிவாலா ஆகியோர் விடுமுறை நாட்களை கழிக்க கடந்த மார்ச் மாதம் 8 ஆம் தேதி தங்கள் மனைவிகளுடன் நியூசிலாந்திற்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

அவர்கள் மார்ச் 27 ஆம் தேதி மீண்டும் இந்தியாவிற்கு திரும்பி வர முடிவு செய்துள்ளனர். ஆனால் மார்ச் 24 ஆம் தேதி முதல் இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு விமான சேவை ரத்து செய்யப்பட்டது. இதனால் அவர்களால் நாடு திரும்ப முடியவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.

நியூசிலாந்தில் வாழ அதிக செலவு ஆவதால் அவர்களிடம் பணத்தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதாம். மேலும் இந்தியாவில் தாங்கள் செய்ய வேண்டிய கடமைகள் இருப்பதால் உடனே நாடு திரும்ப இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். இவர்களை போல 1000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் நியூசிலாந்தில் சிக்கி தவிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.


Advertisement