தொட்டு தொட்டு பேசும் சுல்தானா.. அசத்தல் அழகு.! இளசுகளை சொக்கி இழுக்கும் நடிகை பிரியா வாரியர்.!
சிறைக்கைதிகளுக்கு வீடியோ கால் அறிமுகம். ஆச்சரியப்படுத்தும் சிறப்பு சலுகை..!!!

தங்கள் குடும்பத்தினருடன் சிறையில் உள்ள பெண் கைதிகள் தொடர்புகொள்ள வசதியாக மகாராஷ்டிர அரசு வீடியோ கால் மூலம் உரையாடுவதற்கு சிறப்பு சலுகை வழங்க உள்ளது.
பல்வேறு குற்ற வழக்குகளின் பின்னணியில் பெண்களும் கணிசமான அளவு சிறைவாசம் அனுபவிக்கிறார்கள். அவர்களுக்கு சிறப்பு சலுகையாக அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் மட்டுமே உரையாடுவதற்கு வீடியோ கால் வசதி நாட்டிலேயே முதல்முறையாக மகராஷ்டிரா மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இதனை பரிசோதிக்கும் விதமாக இந்தியாவிலேயே மிகவும் பிரபலமான மும்பை எரவாடா சிறையில் அனுமதிக்கப்பட உள்ளது. கைதிகள் பேசும்போது சிறை அதிகாரிகள் உடன் இருப்பார்கள். அவர்களுக்கு என்று தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 நிமிடத்திற்கு ஐந்து ரூபாய் வீதம் வசூலிக்கபட உள்ளது. இதற்கு முன்பு காயின் பாக்ஸ் மூலம் பேசும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ஒரு நிமிடத்திற்கு ஒரு ரூபாய் என்ற முறையில் வசூல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.