இந்தியா Covid-19

நேவி மும்பையில் ஐடி நிறுவனத்தை சேர்ந்த 19 பேருக்கு கொரோனா! கம்பெனிக்கு சீல் வைப்பு

Summary:

IT firm at navy mumbai has 19 corono positive

மஹாராஷ்டிரா மாநிலம் நேவி மும்பை மாப்பா தொழில்நுட்ப பூங்காவில் உள்ள ஒரு தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் 19 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட அந்த ஐடி நிறுவனம் ஒருசில வங்கிகளின் தகவல் சேகரிப்பு சர்வர்களை நிர்வகித்து வருகிறது. அந்த சர்வர்கள் மாப்பா தொழில்நுட்ப பூங்காவில் உள்ள கிளையில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்பட்சத்திலும் வங்கிகள் இயங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த ஐடி நிறுவனம் 40 ஊழியர்களை கொண்டு வங்கிகளின் சர்வர்களை இயக்கியுள்ளது.

இந்நிலையில் அந்நிறுவனத்தின் சார்பாக நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 19 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உடனடியாக வாசியில் உள்ள NMMC மருத்துவமனையில் அந்த 19 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அந்த நிறுவனத்தை பாதுகாப்புடன் சுத்தம் செய்து பின்னர் சீல் வைத்துள்ளனர் காவல் துறையினர்.

கொரோனா பாதிக்கப்பட்ட அந்த 19 பேரில் 7 பேர் நேவி மும்பையை சேர்ந்தவர்கள். 2 பேர் தானே, 7 பேர் மும்பை, சங்லி, தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தை சேர்ந்த தலா ஒருவர் ஆவர். மேலும் இவர்கள் எங்கெல்லாம் பயணம் செய்தார்கள் என்ற தகவலினை போலீசார் சேகரித்து வருகின்றனர்.


Advertisement