உக்ரைன் - ரஷியா போர்ப்பதற்றம்... இந்தியாவுக்கு இடம்பெறும் ஐ.டி நிறுவனங்கள்?.!
உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பால், தகவல் தொழில்நுட்பத் துறையிலும் அதன் தாக்கம் எதிரொலித்துள்ளது. வெளிநாடுகளில் உள்ள நிறுவனத்தில் பணியாற்றும் இந்தியர்கள், வீட்டில் இருந்தவாறு இந்தியாவில் வேலைபார்க்கின்றனர்.
ரஷியாவின் படையெடுப்பு காரணமாக ஏற்பட்ட தாக்கத்தால், தகவல் தொழில்நுட்ப பணிகள் பாதிக்கப்பட்டு, 1 இலட்சம் பேர் வேலை இழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், உக்ரைன் - ரஷியா பதற்றத்தால் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்தியாவுக்கு வர திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்தியா மட்டுமல்லாது தெற்காசிய நாடுகளுக்கும் ஐ.டி நிறுவனங்கள் காலூன்ற முடிவெடுத்துள்ள நிலையில், பாதுகாப்பு அம்சங்கள் போன்ற விஷயங்களை கருத்தில் கொண்டு இந்தியாவை பல ஐ.டி நிறுவனங்கள் தேர்வு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் எதிர்வரும் வருடங்களில் இந்தியாவில் ஐ.டி நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.