இந்தியா

டெல்லி கலவரத்தால் இந்து பெண்ணின் திருமணத்தில் ஏற்பட்ட பெரும் சிக்கல்!இஸ்லாமியர்கள் ஒன்றுகூடி செய்த நெகிழ்ச்சி காரியம்!

Summary:

islam people help for hindu girl marriage in delhi

டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடந்து வரும் போராட்டம் கலவரமாக மாறியது. இதனால் டெல்லி முழுவதும் கலவரபூமியாக மாறியுள்ளது. கடைகள் அடித்து நொறுக்கப்பட்டு, தீ வைக்கப்பட்டுள்ளது, பொதுமக்கள் தாக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த கலவரத்தால் இதுவரை 35க்கும் அதிகமான பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் பலர் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முஸ்லிம்கள் அதிகம் வாழும் கிழக்கு டெல்லி பகுதியில் வசித்து வருபவர் சாவித்ரி பிரசாத்.  23 வயது நிறைந்த இவருக்கு கடந்த 24 ஆம் தேதி  திருமணம் நடைபெற நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஆனால் டெல்லியில் நடந்த கலவரத்தால் திருமணத்தை குறித்த நாளில் நடத்த முடியவில்லை. மேலும் திருமணத்தை தள்ளி வைக்குமாறு மணமகனின் குடும்பத்தார்களும் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்துள்ளனர்.

இதனால்  சாவித்திரி மற்றும் அவரது குடும்பத்தினர்கள் கவலையில் இருந்து வந்துள்ளனர். மேலும் திருமணத்தை நாளை நாளை என தள்ளி வைத்துக்கொண்டே வந்த நிலையில், மணமகனும் அவரது குடும்பத்தினருக்கும் திருமணத்திற்கு வருவது மிகவும் ஆபத்தானது என எண்ணிய சாவித்ரியின் தந்தை திருமணத்தை மேலும் தள்ளிவைக்க முடிவு செய்துள்ளார்

இந்நிலையில் இவர்களது நிலையை அறிந்த அப்பகுதியில்  வசித்துவந்த இஸ்லாமிய நண்பர்கள்,  தாங்கள் மணமகனின் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அளிப்பதாக உறுதி அளித்து திருமணத்தை நடத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். அதைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தில் உள்ள இஸ்லாமியர்களின் பாதுகாப்புடன் சாவித்ரியின்  திருமணம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து சாவித்திரி கூறுகையில் இஸ்லாமிய சகோதரர்கள் எனக்கு பாதுகாப்பு அளித்து திருமணத்தை நடத்தி வைத்தனர். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என கூறியுள்ளார்.
 


Advertisement