இந்தியா உலகம்

இந்திய ராணுவ வீரரை பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடத்தி சென்றார்களா?? வெளியானது உண்மை!!

Summary:

is indian army man kidnapped??


ஜம்மு காஷ்மீர் புட்காம் மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர் ஒருவரை பயங்கரவாதிகள் அவரது வீட்டிலிருந்து கடத்தி சென்றதாக நேற்று மாலை தகவல் வெளியானது.

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், பாகிஸ்தான் கட்டுப்பாட்டு காஷ்மீரில் உள்ள பால்கோட் பகுதியில் தீவிரவாதிகள் முகாம் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது.

india pakistan army க்கான பட முடிவு

இதற்கு பழிவாங்கும் வகையில் இன்னும் 4 நாட்களில் மீண்டும் பெரிய தாக்குதல் நடத்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு திட்டமிட்டுள்ளதாக இந்திய உளவுத் துறை அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலயில் ஜம்மு மற்றும் காஷ்மீர் புட்காம் மாவட்டத்தில் காலாட்படையை சேர்ந்த  முகமது யாசின் என்பவரை அவரது வீட்டிலிருந்து பயங்கரவாதிகள் நேற்று மாலை கடத்தி சென்றுவிட்டதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில், ராணுவ வீரர் முகமது யாசின் கடந்த பிப்ரவரி 26ம் தேதி முதல் மார்ச் 31ம் தேதி வரை விடுப்பில் சென்றதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


 


Advertisement