உயிரிழந்த முப்படை தளபதி பிபின் ராவத்தின் மனைவி இப்படிப்பட்டவரா..? வெளியான நெகிழ்ச்சி தகவல்கள்.!
உயிரிழந்த முப்படை தளபதி பிபின் ராவத்தின் மனைவி இப்படிப்பட்டவரா..? வெளியான நெகிழ்ச்சி தகவல்கள்.!

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் நேற்று முன்தினம் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேர் சென்ற இராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த விபத்தில் விமானத்தின் பைலட், கேப்டன் வருண் சிங் மட்டும் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்றுவருகிறார்.
முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்தின் மனைவி மதுலிகா மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஷாதோல் மாவட்டம் சோஹாக்பூர் என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். பிபின் ராவத்தின் மனைவி மதுலிகா ராவத்தின் மறைவுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்துவருகிறார்கள்.
1986-ம் ஆண்டு பிபின் ராவத்தை திருமணம் செய்து கொண்டார் மதுலிகா. இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். மூத்த மகளுக்குத் திருமணமாகிவிட்டது. இன்னொருவர் படித்துக்கொண்டிருக்கிறார். மதுலிகாவின் தந்தை 1967-72 காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியவர். மதுலிகாவின் தந்தை இப்போது உயிருடன் இல்லை.
Army Wives Welfare Association' என்ற பெயரில் தொடங்கப்பட்ட ராணுவ வீரர்களின் மனைவிகளுக்கான நலச் சங்கத்தின் தற்போதைய தலைவராகச் செயல்பட்டுவந்தார் மதுலிகா. அதன் இணைய பக்கத்தில், இது ராணுவ வீரர்களின் மனைவிகள், குழந்தைகள் மற்றும் ராணுவ வீரர்களை சார்ந்திருப்பவர்களுக்காகச் செயல்படும் அமைப்பு என விவரிக்கப்பட்டுள்ளது.
ராணுவ வீரர்களின் மனைவிகள் நலச் சங்கம் 1966-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. மேலும், இது நாட்டின் மிகப்பெரிய தன்னார்வ நிறுவனங்களில் ஒன்றாகவும் கூறப்படுகிறது. கணவரை இழந்த ராணுவ வீரர்களின் மனைவிகள், புற்றுநோயாளிகள், ஊனமுற்ற குழந்தைகளுக்களுக்கு உதவி செய்யும் சமூகப் பணிகளில் ஈடுபட்டார் மதுலிகா ராவத் என தெரியவந்துள்ளது.