தமிழகம் இந்தியா

இந்தியாவிலேயே அதிகமாக சம்பளம் வாங்கும் சன் நெட்வொர்க் அதிகாரிகள்! யார் தெரியுமா?

Summary:

India's highly paid ceo's

இந்தியாவில் உள்ள நிறுவனங்களில் அதிகமமாக சம்பளம் வாங்க கூடிய முதன்மை நிர்வாக அதிகாரிகள்(CEO) சன் நெட்வொர்க் உரிமையாளர்களான கலாநிதி மாறன் மற்றும் அவரது மனைவி காவேரி கலாநிதி மாறன் தான் என்பது தெரியவந்துள்ளது. 

இவர்கள் இருவருமே வருடத்திற்கு சம்பளமாக 13.83 கோடியும், இதர மற்றும் ஊக்கத்தொகையாக 73.67 கோடியும் என வருடத்திற்கு மொத்தம் 87.50 கோடி ரூபாய் சம்பளமாக பெறுகின்றனர். இந்தியாவில் உள்ள நிறுவனங்களில் அதிகமாக சம்பளம் பெறுபவர்கள் இவர்கள் இருவரும் தான். 

மேலும் சன் நெட்வொர்க் நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் 2019 ஆம் ஆண்டில் அவர்கள் இருவரின் சம்பளத்தில் எந்த மாற்றமும் இருக்காது என தெரிவித்துள்ளனர். மேலும் சன் நெட்வொர்க்கில் 75% பங்குகளை வைத்துள்ள கலாநிதி மாறன் 2018 ஆம் ஆண்டில் மட்டும் 295.56 கோடி ரூபாயை பங்கீட்டு தொகையாக பெற்றுள்ளார். 

தமிழ், தெலுங்கு, கண்ணடம் மற்றும் மலையாளம் என 4 மொழிகளிலும் பல்வேறு சாட்டிலைட் சானல்களை நடத்தி வரும் சன் நெட்வொர்க் நிறுவனம் ஹைதராபாத் ஐபிஎல் அணியின் உரிமையாளராகவும் இருந்து வருகிறது. இந்நிலையில் கலாநிதி மாறனின் மகளான காவ்யா கலாநிதி மாறனும் கடநத் மார்ச் மாதம் முதல் சன் நெட்வொர்க் நிர்வாக குழுவில் இணைக்கப்பட்டுள்ளார். 


Advertisement