இந்திய பயணிகள் விமானத்தை சுற்றிவளைத்த போர் விமானங்கள்! அதிர்ச்சி தகவல்.
இந்திய பயணிகள் விமானத்தை சுற்றிவளைத்த போர் விமானங்கள்! அதிர்ச்சி தகவல்.

ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திற்கு சொந்தமான இந்திய பயணிகள் விமானம் ஓன்று பாகிஸ்தான் எல்லை பகுதியில் பறந்துகொண்டிருந்தபோது அந்த விமானம் இந்திய போர் விமானம் என எண்ணி பாகிஸ்தான் போர் விமானங்கள் அந்த விமானத்தை சுற்றி வளைத்ததும், அதற்கான காரணங்களும் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் வான்வெளியில் இந்திய போர் விமானம் ஓன்று பறந்துவருவதாக பாகிஸ்தான் விமான படைக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து F-16 ரக இரண்டு போர் விமானங்கள் இந்திய விமானத்தை நெருங்கி, விமானத்தை சற்று தாழ்வாக பறக்க கூறியதோடு அந்த விமானத்தின் தகவல்களை தரும்படி விமானியிடம் கேட்டுள்னனர்.
இது போர் விமானம் அல்ல என்றும் பயணிகள் விமானம், 120 பயணிகளுடன் கான்பூல் நகருக்கு பறந்துகொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார் விமானி. இந்த தகவல்களை உறுதி செய்தபின்னர் பாகிஸ்தான் போர் விமானங்கள் திரும்பி வந்துள்ளன.
இதுகுறித்து இந்திய சிவில் ஏவியேஷன் இயக்குனராக அதிகாரிகள் கூறுகையில் குறிப்பிட்ட விமானம் இதற்கு முன்னர் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமானது என்றும், ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் அதை சமீபத்தில் வாங்கியுள்ளதாகவும் தெரிவித்தனர்.
மேலும், புதிதாக விமானங்கள் வாங்கும்போது ஒவொரு விமானத்திற்கும் 23 இலக்கங்கள் கொண்ட ஒரு ஆல்பா எண் வழங்கப்படும் என்றும் அந்த எண்ணை விமானம் ஒரு சிக்னலாக வெளியிடும் என்றும், அந்த சிக்னலை கொண்டு அந்த விமானத்தின் விவரங்களை தெரிந்துகொள்ளலாம் என்றும் கூறினார்.
இந்நிலையில் இந்த விமானத்திற்கு வழங்கப்பட வேண்டிய 23 இழக்க ஆல்பா எண்ணிற்கு பதிலாக இந்திய விமானப்படை விமானத்திற்கு வழங்கவேண்டிய எண்ணை அதிகாரி ஒருவர் தவறுதலாக வழங்கியுள்ளார். இதனாலயே அந்த விமானத்தை பாகிஸ்தான் போர் விமானம் என கருதி பின் தொடர்ந்துள்ளது.
தற்போது அந்த அதிகாரி பணியிடை நீங்கம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்னனர்.