இந்திய பெண் மருத்துவருக்கு மரியாதை செலுத்திய அமெரிக்க போலீசார்.! இணையத்தில் வைரலாகும் வீடியோ.!

இந்திய பெண் மருத்துவருக்கு மரியாதை செலுத்திய அமெரிக்க போலீசார்.! இணையத்தில் வைரலாகும் வீடியோ.!


Indian-origin doctor in US honoured in front of her house with a parade

இந்தியாவை சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவருக்கு அமெரிக்க போலீசார் கார்களில் அணிவகுத்து வந்து மரியாதை செலுத்தியுள்ள காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது.

சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. உலக வல்லரசு நாடுகளில் ஒன்றான அமெரிக்கா கொரோனா வைரசால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இதுவரை 819,175 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 45,343 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இந்நிலையில் கொரோனவை கட்டுப்படுத்த அமெரிக்கா தீவிரமாக போராடிவருகிறது. இதனிடையே இந்தியாவின் மைசூரை சேர்ந்த உமா மதுசூதனன் என்ற பெண் மருத்துவர் அமெரிக்காவில் உள்ள Windsor என்ற மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கிவருகிறார்.

மருத்துவரின் சேவையை பாராட்டும் விதமாக, அந்த பகுதியை சேர்ந்த போலீசார் பெண் மருத்துவரின் வீட்டிற்கு முன்புறம் உள்ள சாலையில் பல வாகனங்களில் அணிவகுத்துவந்து, சல்யுட் அடித்து தங்கள் மரியாதையை செலுத்தியுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.