நோய்வாய்ப்பட்ட இளைஞரை 8 கி.மீ தோளில் சுமந்து சென்று நெகிழ வைத்த சிஆர்பிஎஃப் வீரர்கள்.!

நோய்வாய்ப்பட்ட இளைஞரை 8 கி.மீ தோளில் சுமந்து சென்று நெகிழ வைத்த சிஆர்பிஎஃப் வீரர்கள்.!


india---saththiskar---sukma-district---crpf-helf

இந்தியாவில் தீவிரவாதிகள் அதிகம் நடமாட்டம் உள்ள பகுதி சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள சுக்மா மாவட்டம். இதனால் இப்பகுதியில் வாழும் மக்களுக்கு சாலை வசதிகள் சரிவர அமையப் பெறவில்லை. மிகவும் பின்தங்கிய நிலையில் வாழும் இப்பகுதி மக்கள் போக்குவரத்திற்காக மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

இதனால் தங்களுடைய அடிப்படை தேவைகளை கூட நிறைவு செய்துகொள்ள முடிவதில்லை. இந்நிலையில், அங்கு ரோந்து பணிக்காக சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்றுள்ளார்கள். அங்கு வெகுநாட்களாக மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட இளைஞரை பற்றி கேள்வி பட்டுள்ளார்கள். பிறகு அந்த இளைஞருக்கு உதவி செய்து அவரது உயிரை காப்பாற்ற வேண்டும் என்று முடிவெடுத்துள்ளார்கள்.

CRPF attack

இதனைத் தொடர்ந்து நான்கு சிஆர்பிஎஃப் வீரர்கள் இருவர் இருவராக சேர்ந்து மாறி மாறி தங்கள் தோளில் சுமந்து கொண்டு எட்டு கிலோமீட்டர் வரை பயணித்துள்ளனர். வீரர்களின் இந்த பேருதவியை கண்டு அந்த இளைஞரின் குடும்பத்தார்கள் மற்றும் அப்பகுதி மக்கள் மிகவும் நெகிழ்ச்சி அடைந்து வீரர்களுக்கு தங்களது நன்றியினை தெரிவித்து உள்ளார்கள்.