13 வயது சிறுமி பலாத்காரம், கொலை.. தாயிடம் கோபித்து வெளியேறியவருக்கு நேர்ந்த சோகம்..! அதிரவைக்கும் ஆட்டோ ஓட்டுனரின் வாக்குமூலம்.!



in west Bengal Kolkata 13 year Old Girl Rape Murder 

 

மேற்குவங்கம் மாநிலத்தில் உள்ள கொல்கத்தா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. இதனிடையே, 8 ம் வகுப்பு பயின்று வரும் மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட பயங்கரம் நடந்துள்ளது. 

கொல்கத்தாவில் உள்ள நியூ டவுன் பகுதியில் வசித்து வரும் மாணவியை, அவரின் தாயார் படிக்கும் விஷயத்தில் நீ சரியில்லை என சம்பவத்தன்று திட்டி இருக்கிறார். இதனால் இரவு 10 மணிக்கு மேல் சிறுமி கடிதம் எழுதிவைத்து வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றார். 

இதையும் படிங்க: எக்ஸ்பிரஸ் இரயிலில் பயங்கரம்.. பயணி சுட்டுக்கொலை..!

பின் நள்ளிரவு நேரத்தில் வீட்டிற்கு திரும்ப இயலாமல் பரிதவித்த சிறுமி, தன்னிடம் கையில் பணம் இல்லாததால், வீட்டில் கொண்டு சென்று விட்டால் பணம் வாங்கி தருகிறேன் என கூறி ஷேர் ஆட்டோவில் ஏறி இருக்கிறார். 

west bengal

சிறுமி பலாத்காரம் & கொலை

ஆட்டோவில் மாணவியை ஏற்றுக்கொண்ட ஓட்டுநர் சௌமித்ரா ராய், பிற பயணிகளை இறக்கிவிட்டு, மாணவியை தனியாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின் அவரின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இதனிடையே, மகள் மாயமானது தொடர்பாக தாய் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்திருந்தார். 

இந்த புகாரின் பேரில் சிசிடிவி கேமிரா ஆய்வு செய்யப்பட்டு இறுதியில் சௌமித்ரா கைது செய்யப்பட்ட நிலையில், மாணவியின் பலாத்காரம் மற்றும் மரணம் தெரியவந்தது. சிறுமியின் உடல் கழுத்து பகுதியில் காயத்துடன், அவரின் வீட்டில் இருந்து 6 கிமீ தொலைவில் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் உண்டாக்கி இருக்கிறது. மேலும், கைதாகிய சௌமித்ரா மீது ஏற்கனவே பாலியல் குற்றச்சாட்டும் நிலுவையில் இருந்துள்ளது.

இதையும் படிங்க: "ஆண்ட்டி ப்ளீஸ் வேண்டாம்" பதறிய சிறுவன்.. பாலியல் பலாத்காரம் செய்த 28 வயது பெண்.!