பாஜக வேட்பாளரின் கார் மோதி 2 சிறார்கள் பலி., உ.பி-யில் அதிர்ச்சி சம்பவம்.!in Uttar Pradesh Karan Bhushan Singh Car Accident 

 

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கைசர்கன்ச் தொகுதியில் பாஜக வேட்பாளராக களமிறங்கி இருப்பவர் கரண் பூஷன் சிங். இவர் பாஜக சார்பில் அத்தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

கரண் பூஷன் சிங், சர்ச்சைக்குரிய பாலியல் வழக்கில் சிக்கிய பிரிஜ் பூஷணின் மகன் ஆவார். இவரின் தந்தை மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றசாட்டு எழுந்து, இன்று வரை விசாரணை முன்னேற்றம் இல்லை. 

இதையும் படிங்க: கூகுள் மேப் காட்டிய வழியால் கால்வாயில் பாய்ந்த கார்.. இன்ப சுற்றுலாவில் திகில் சம்பவம்.!

கார் மோதி இருவர் பலி

இதனிடையே, கரண் பூசன் சிங் கார் மோதிய விபத்தில் 2 சிறார்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், கரண் பூசனின் காரை பறிமுதல் செய்தனர். 

car accident

இந்த சம்பவம் குறித்து தொடர் விசாரணை நடந்து வரும் நிலையில், காரில் கரண் பூஷன் இருந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், தற்போது வரை அதிகாரிகளால் இத்தகவல் உறுதி செய்யப்படவில்லை. ஒரு வேலை உரிய ஆதாரங்கள் இருக்கும் பட்சத்தில், அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் எனவும் அஞ்சப்படுகிறது.

முதற்கட்ட விசாரணையில் மருந்து வாங்க வந்த 17 வயது சிறுவன் ரெஹான், அவரின் உறவினர் ஷாஜாத் (வயது 24) ஆகியோரின் இருசக்கர வாகனத்தில், பூஷணின் கார் ஓட்டுநர் லூவ்குஷ் ஸ்ரீவஸ்தவா மோதி ஏற்பட்ட விபத்தில் பலியானது உறுதி செய்யப்பட்டது.

இதையும் படிங்க: 11 வயது சிறுவனை கடுமையாக தாக்கிய தாய்; பதறவைக்கும் சம்பவம்.. குடும்ப சண்டையில் கொடூரம்.!