மோகன்லால், பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள எல்2:எம்பூரான் திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு.!
பத்திரிகையாளர்களை நிர்வாணப்படுத்தி, சிறுநீர் குடிக்க வைத்த பாஜக பிரமுகர்.. ஊழலை எதிர்த்ததால் பகீர்.!
முறைகேடு, ஊழல் போன்றவற்றை எதிர்த்து பத்திரிக்கையில் எழுதிய செய்தியாளர்கள் இருவர் கடத்தப்பட்டு தாக்கப்பட்டனர். இந்த சம்பவம் உ.பி-யில் நடந்துள்ளது.
பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஹமிர்பூர் மாவட்டம், சரிளா நகர் பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் பவன் அனுராகி. இவர் பாஜக கட்சியை சேர்ந்தவர் ஆவார். இவரின் பஞ்சாயத்து அதிகாரத்தை பயன்படுத்தி முறைகேடு, நிதிமோசடி போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த விஷயம் குறித்து பத்திரிகையாளர்களான அமித் திவேதி மற்றும் ஷைலேந்திர மிஸ்ரா ஆகியோரை பவன் சம்பவத்தன்று தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இதையும் படிங்க: சிறுமியின் கையைப்பிடித்து இழுத்து நடுரோட்டில் பகீர்.. பதறவைக்கும் காட்சிகள்.. பாதுகாப்பே இல்லையா? உ.பியில் அதிர்ச்சி.!
போலியான தகவலை சொல்லி வழக்குப்பதிவு
அங்கு பத்திரிகையாளர்கள் இருவரையும் தனது ஆதரவாளர்கள் கொண்டு கடுமையாக தாக்கியவர், அவர்களின் ஆடையை களைந்து நிர்வாணமாக வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர். மேலும், தனது உள்ளூர் செல்வாக்கை பயன்படுத்தி, பத்திரிகையாளர்கள் மீது எஸ்சி., எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை பாய்ச்சி, இருவரையும் சிறையில் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த தகவலை அறிந்த பிற பத்திரிகையாளர்கள், தற்போது இந்த சம்பவத்தை வெளிக்கொணர்ந்து இருக்கின்றனர்.
நியாயத்தை நிலைநாட்ட கோரிக்கை
தற்போது இந்த விவகாரத்தில் அகிலேஷ் ராஜ்புத், விக்ரம் யாதவ், நரேந்திர விஸ்வகர்மா, ஆர்.கே.சோனி மற்றும் தலைவரின் மருமகன் ஆகாஷ் அனுராகி ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ள பத்திரிகையாளர்கள், இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.
அதிகரிக்கும் சாதிய கொலைகள்?
மேலும், பத்திரிகையாளர்களை தாக்கி, நிர்வாணப்படுத்தி, சிறுநீரை குடிக்க வைத்து மிரட்டியதாகவும் தெரியவருகிறது. இந்த சம்பவத்தால் அங்கு தொடர் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. ஏற்கனவே அம்மாநிலத்தில் பிராமண வகுப்பை சேர்ந்தவர்கள் தொடர்ந்து குறிவைத்து தாக்கப்படுவதாகவும், கடந்த ஒரு வாரத்திற்குள் 5 பிராமண வகுப்பை சேர்ந்த நபர்கள் சாதியாக ரீதியான தாக்குதலில் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே, 2 பிராமண வகுப்பை சேர்ந்த பத்திரிக்கையாளர்கள் உள்ளூர் பாஜக பிரமுகரால் தாக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. கள தகவல்கள் சேகரிக்கப்படுகிறது.
अति भयावह घटना दलित भाजपा अध्यक्ष ने ब्राह्मण पत्रकार अमित द्विवेदी और शैलेन्द्र मिश्रा का अपहरण कर उन्हें पीटा और उन्हें नग्न किया, और उन पर SC/ST Act का मामला भी दर्ज करवा दिया। यह सब UP के हमीरपुर में हो रहा है ऐसे कृत्यों की घोर निंदा होनी चाहिए।https://t.co/t0wP7nLWTc
— Saurabh Tiwari (शांडिल्य) (@subhamt356) November 2, 2024
இதையும் படிங்க: பட்டாசு வெடித்து சிதறிய கண்ணாடி; கழுத்து அறுபட்டு சிறுவன் துள்ளத்துடிக்க மரணம்.. தீபாவளி கொண்டாட்டத்தில் சோகம்.!