புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
பட்டாசு வெடித்து சிதறிய கண்ணாடி; கழுத்து அறுபட்டு சிறுவன் துள்ளத்துடிக்க மரணம்.. தீபாவளி கொண்டாட்டத்தில் சோகம்.!
தீபாவளி பட்டாசு வெடித்து கண்ணாடி சிதறியதால் 8 வயது சிறுவனின் கழுத்து, தலை அறுபட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
மகிழ்ச்சி சோகமாக மாறியது
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள சஹரான்பூர் மாவட்டம், மொஹாலியா பகுதியில் வசித்து வருபவர் அசோக் குமார். இவரின் மகன்கள் வாஷ் (வயது 8). சிறுவன் தீபாவளியை முன்னிட்டு பட்டாசுகள் வெடித்து மகிழ்ந்துகொண்டு இருந்தார்.
கண்ணாடி சிதறி சோகம்
நேற்று இரவு சுமார் 09:30 மணியளவில், சிறுவன் வீட்டின் வெளியே பட்டாசுகளை வெடித்துக்கொண்டு இருந்தார். அச்சமயம், கண்ணாடி பொருள் ஒன்றுக்கு அருகே வைத்து பட்டாசு வெடித்ததாக தெரியவருகிறது. இந்த சம்பவத்தில் பட்டாசு வெடித்ததும் கண்ணாடி சிதறி பறந்துள்ளது.
இதையும் படிங்க: தாத்தாவின் வேட்டியில் ராக்கெட் விட்ட இளைஞர்; இது தீபாவளி பரிதாபங்கள்.. வைரல் வீடியோ உள்ளே.!
கழுத்து அறுபட்டு பலி
கண்ணாடி துகள்கள் சிறுவனின் கழுத்து, தலை பகுதியை கடுமையாக சேதப்படுத்தியுள்ளது. இதனால் வலியால் அலறிய சிறுவனின் சத்தம் கேட்டு வந்த குடும்பத்தினர், மகனை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
குடும்பத்தினர் கண்ணீர்
கண்ணாடிகள் வெடித்து சிதறியதில், சிறுவனின் கழுத்து அறுக்கப்ட்டது. சிறுவனின் குரல்வளை, தொண்டை பகுதியிலும் கண்ணாடி துகள்கள் ஆழமாக புகுந்தது சிறுவனின் மரணத்திற்கு வழிவகை செய்துள்ளது என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும், கண்ணாடி, செராமிக் உட்பட எந்த பொருட்களுக்கு அருகேயும் பட்டாசுகளை வைத்து வெடிக்க கூடாது. இவ்வாறான செயல்கள் சிலநேரம் பெரும் ஆபத்துகளை விளைவிக்கும் எனவும் அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.
⚠️ Disturbing Visual⚠️
— Sachin Gupta (@SachinGuptaUP) November 2, 2024
सहारनपुर, यूपी में 8 साल के वंश ने दिवाली बम के ऊपर कांच का ग्लास रख दिया। बम फूटा और कांच का टुकड़ा गले में जा घुसा। वंश की मौत हो गई। @AmitGup96968797 pic.twitter.com/MWzzwrduNR
அணுகுண்டு, லட்சுமி போன்ற பட்டாசுகளை பற்றவைத்து, அதற்குள் பாத்திரம், செம்பு போன்றவற்றை கவிழ்த்துப்போட்டு, பட்டாசு வெடிக்கும் வரை காத்திருக்கும் அலட்சிய பேர்வழிகளுக்கு இந்த செய்தி ஓர் எச்சரிக்கை பாடம்.
இதையும் படிங்க: வெங்காய வெடிகள் வெடித்து இளைஞர் பீஸ்., பீஸாக சிதறி மரணம்; தீபாவளியன்று பயங்கரம்.!