"ஐயோ காந்தி எங்களை விட்டு போயிட்டார்" - கட்டிப்பிடித்து அழுது அழிச்சாட்டியம் செய்த குடிமகன்கள்.!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கண்ணுஜ் மாவட்டம், நிர்வா பகுதியில் காந்தி சிலை ஒன்று சாலையோரம் இருக்கிறது. கடந்த சனிக்கிழமை இவ்வழியாக சென்ற லாரி, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து காந்தி சிலை மீது மோதியது.
இந்த சம்பவத்தில் சிலை மற்றும் அதன் அடிப்பகுதி அமைப்புகள் சுக்குநூறாக நொறுங்கிப்போயின. இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ரூ.1200 திருடுபோனதில் சந்தேகம்; தொழிலாளி அடித்துக்கொலை.!
இதனிடையே, சம்பவத்தன்று அங்கு வந்த 2 போதை ஆசாமிகள், காந்தி சிலை நொறுங்கியிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும், போதையில் இருந்த இருவரும், ஐயோ காந்தி எங்களை விட்டு போயிட்டீங்களே என்பதை போல கூறி கதறி அழுதனர்.
மேலும், உடன் இருந்தவரை இழந்தது போல தவிப்புக்குள்ளாகி, கதறி ஓலமிட்டனர். ஒருகட்டத்தில் மண்ணை வாரியும் தூற்றினர். இந்த விஷயம் குறித்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. விடியோவுக்கு நம்ம ஊர் நெட்டிசன்கள் பலரும் இது உபி வீரனின் செயல்பாடு காரணமாக இருக்கலாம் என்றும் கலாய்த்து வருகின்றனர்.
कन्नौज के तिर्वा में एक चौराहे पर ट्रक की टक्कर से गांधी प्रतिमा टूट गई शनिवार को शराबियों ने गांधी प्रतिमा टूटने पर रो कर अफसोस जताया। #Kannauj #MahatmaGandhi @NBTLucknow pic.twitter.com/viHokfjAGr
— Praveen Mohta (@MohtaPraveenn) March 15, 2025
இதையும் படிங்க: என் புருஷன் மேலே நீ எப்படி கலர் பூசுவ? மாமியார் - மருமகள் சண்டையில் பறிபோன உயிர்.!