ஏ.ஆர் ரகுமானுக்கு என்ன ஆனது? வெளியானது மருத்துவ அறிக்கை.. வீடு திரும்பினார்.!
'ஆசைக்கு இணங்கு' - 25 வயது ஐடி பெண் ஊழியர் தீக்குளித்து தற்கொலை; பதறவைக்கும் விபரீதம்.!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர், கேஆர் புரத்தில் உள்ள எஸ்விஎஸ் பாரடைஸ் குடியிருப்பில் வசித்து வருபவர் சுஹாசி சிங் (வயது 25). இவர் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். தற்போது அத்தையின் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். அத்தையின் கணவர் ப்ரவீன் சிங். சுஹாசி சிங் - பிரவீன் இடையே ஏற்பட்ட பழக்கம், பின்னாளில் திருமணத்தை மீறிய உறவாக ப்ரவீனுக்கு தொடர்ந்ததாக கூறப்படுகிறது.
தனிமை - நெருக்கடி
இருவரும் குடுமப்த்தினரிடம் நல்ல அன்பை பெற்றவர்கள் போல பாவித்து, பின் இருவரும் பல இடங்களுக்கு தனிமையில் சென்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, சுஹாசிக்கு வேறொரு நபருடன் பழக்கம் ஏற்பட்டு, அவர் பிரவீனிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரவீன், சுஹாசிக்கு நெருக்கடியை ஏற்படுத்த தொடங்கியுள்ளார்.
இதையும் படிங்க: பசுவின் மடியை அறுத்த நபர்; போதையில் அரங்கேறிய பயங்கரம்.!
ஆசைக்கு இணங்கு
மேலும், நாம் தனிமையில் எடுத்துக்கொண்ட புகைப்படம், விடியோவை வெளியிடுவேன் எனவும் மிரட்டி இருக்கிறார். இதனால் பயந்துபோன பெண்மணி பேசாமல் இருந்து வந்த நிலையில், கடந்த ஜனவரி 12 அன்று இருவரும் தனியாக விடுதிக்கு சென்றுள்ளனர். அங்கு பிரவீன் தனது ஆசைக்கு இணங்குமாறு கூறியுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்து வாக்குவாதம் நடந்துள்ளது. தனிமை காட்சிகளை வெளியிட்டுவிடுவேன் என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
தற்கொலை செய்த சோகம்
இதனால் ஒருகட்டத்தில் மனமுடைந்து போன பெண்மணி, பெட்ரோல் வாங்கி வந்து உடலில் ஊற்றி தீக்குளித்து கழிவறையில் தற்கொலை செய்துகொண்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் சுஹாசியை மீட்ட பிரவீன் மருத்துவமனையில் அனுமதி செய்த நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி பெண்மணி உயிரிழந்தார். இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், பிரவீணை கைது செய்தனர்.
இதையும் படிங்க: போதையில் அடவாடி செய்த மாப்பிள்ளை தோழர்கள்.. திருமணத்தை நிறுத்தி ஷாக் கொடுத்த மாமியார்.!