புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
கள்ளக்காதல் சந்தேகத்தில் 15 வயது சிறுவன் கொலை; நண்பருடன் சேர்ந்து இளைஞர் பயங்கரம்.!
தனது மனைவியுடன் சிறுவன் கள்ளக்காதல் வைத்திருக்கிறானோ என்ற சந்தேகத்தில், இளைஞர் 15 வயது சிறுவனை கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது.
ஹரியானா மாநிலத்தில் உள்ள குறுகிறாம், களில்பூர் கிலவாஸ் அணைப்பகுதியில் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டவாறு 15 வயது மதிக்கத்தக்க சிறுவனின் சடலம், கடந்த செப் 26ம் தேதி காவல் துறையினரால் கண்டெடுக்கப்பட்டது. இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.
இதையும் படிங்க: #JustIN: மீண்டும் பயங்கரம்.. பயணிகள் இரயில் தடம்புரண்டு விபத்து.. காத்திருந்த அதிஷ்டம்.!
இந்நிலையில், இந்த கொலை வழக்கில் தொடர்புடையதாக ரேவாரி மாவட்டத்தில் உள்ள சில்ஹார் கிராமத்தை சேர்ந்த அமித் குமார் (வயது 28), தருண் ஜோனி (வயது 29) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடந்த விசாரணையில், சந்தேகத்தில் சிறுவன் படுகொலை செய்யப்பட்டது அம்பலமானது.
கழுத்தை நெரித்துக் கொலை
அதாவது, 15 வயது சிறுவன் அமித் குமாரின் மனைவியுடன் இயல்பாக பழகி வந்துள்ளார். இது இருவரும் கள்ளக்காதல் உறவில் இணைந்திருப்பார்களோ என்ற சந்தேகத்தை அமித் குமாருக்கு எழுப்பி இருக்கிறது. இதனால் சம்பவத்தன்று சிறுவனை தனது நண்பரின் உதவியுடன் தன்னுடன் அழைத்துச் சென்றவர், கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
பின் உடலை களில்பூர் அணை பகுதியில் விட்டுவிட்டு வந்து இருக்கிறார். மகன் மாயமானது குறித்து தந்தையும் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில், சிறுவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டு தீவிர விசாரணை நடந்து வந்தது. தற்போது குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: கைவிட்டுச் சென்ற கள்ளக்காதலன்.. கண்ணீருடன் தவித்த மனைவியை ஏற்றுக்கொண்ட கணவன்.. இப்படியும் ஒரு பாசம்.!