புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் சோகம்.. இளம்பெண்ணின் தந்தை கொடூர கொலை., இளைஞர் வெறிச்செயல்.!
18 வயது மகளின் காதலுக்கு தந்தை எதிர்ப்பாக செயல்பட்ட காரணத்தால், 34 வயது மகளின் காதலனால் 62 வயது தந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
புதுடெல்லி மாநிலத்தில் உள்ள நரேலா பகுதியில் வசித்து வருபவர் பச்சு பிரசாத் சிங் (வயது 62). இவருக்கு 18 வயதுடைய பிங்கி குமாரி என்ற மகள் இருக்கிறார். சிறுமி அப்பகுதியைச் சேர்ந்த 34 வயது சுஃஹிரா சௌதாரி என்பவருடன் காதல் வயப்பட்டு இருந்ததாக தெரியவருகிறது.
இதையும் படிங்க: "புள்ள ஒரு வாய் சோறு தான் கேட்டுச்சு.." 6 வயது மகனை அடித்து கொன்ற தந்தை.!! கொடூர சம்பவம்.!!
காதலுக்கு எதிர்ப்பு:
இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்த நிலையில், இவர்களின் காதல் விவகாரம் பெண்ணின் தந்தைக்கு தெரியவந்து அவர் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். இதனால் அவரை கொலை செய்ய சௌதாரி திட்டமிட்டதாக தெரியவருகிறது.
வயது காரணமாக பல பணிகளில் ஓய்வளிக்கப்பட்டாலும், அவரால் இயன்ற பணிகளை செய்ய தயாராக இருந்த சிங், வேலை தேடி வந்துள்ளார். இதனையடுத்து, அவருக்கு கடந்த அக்.20 அன்று தொடர்புகொண்ட சௌதாரி, செக்யூரிட்டி வேலை வாங்கி தருவதாக கூறி இருக்கிறார்.
கொலை அரங்கேற்றம்
அதன்பேரில் சௌதரியுடன் சென்ற சிங்-க்கு மதுபானம் ஊற்றிக்கொடுத்து, அவரை எரித்துக்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் அங்குள்ள ஷாபூர் கிராமத்தில் நடந்துள்ளது. சில நாட்களாக சிங் வீட்டிற்கு வராமல் இருந்த நிலையில், குமாரி காதலரிடம் தந்தை இன்னும் வீட்டிற்கு வரவில்லை என கூறியுள்ளார்.
அப்போது நமது காதலுக்கு இடையூறாக இருந்த அவரை தீர்த்துக்கட்டிவிட்டேன் என சௌதாரி அதிர்ச்சி உண்மையை கூறியுள்ளார். இதனால் பதறிப்போன குமாரி தனது சகோதரர் பூல் குமாரிடம் (Phool Kumar) தெரிவிக்கவே, அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
குற்றவாளி கைது
இதன்பேரில் கடந்த அக்.27 அன்று வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சிங்-கின் அரைகுறையாக எரிக்கப்பட்ட உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விவகாரம் அம்பலமானது தலைமறைவான சுஃஹிரா சௌதாரி இன்று கைது செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: திக் திக் நிமிடங்கள்.. அந்த நேரத்தில் அடைத்த மூச்சு.!! 14 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்.!!