புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
பள்ளி ஆசிரியையை விரட்டி விரட்டி பலாத்காரம் செய்ய முயற்சி; தலைமை ஆசிரியரின் வெட்கக்கேடான செயல்.!
பீகார் மாநிலத்தில் உள்ள மோதிஹாரி பகுதியில் செயல்பட்டு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக ரஞ்சன் கிரி என்பவர் பணியாற்றி வருகிறார். இதே பள்ளியில் ஆசிரியை ஒருவர் வேலை பார்த்து வருகிறார்.
இதனிடையே, தலைமை ஆசிரியர் ரஞ்சனுக்கு ஆசிரியை மீது மோகம் ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளி வளாகத்திலேயே ஆசிரியரை படுக்கைக்கு அழைத்து வற்புறுத்தி வந்த கயவர், தொடர்ந்து பெண் ஆசிரியரை அவமதிக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வந்துள்ளார்.
இதையும் படிங்க: 22 வயது கல்லூரி மாணவியை கடத்தி கற்பழித்த கொடூரம்.. வீடியோ எடுத்த நண்பன்.. அதிரவைக்கும் சம்பவம்.!
தலைமை ஆசிரியர் அதிர்ச்சி செயல்
ஒருகட்டத்தில் தலைமை ஆசிரியரின் அவச்செயலை பொறுக்க இயலாத பெண் ஆசிரியர், துர்கேலியா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், அங்கு புகார் ஏற்றுக்கொள்ளப்படாமல், பெண்கள் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
அங்கு சென்ற ஆசிரியை அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பெண் ஆசிரியையை பலாத்காரம் செய்யும் நோக்குடன் செயல்பட்ட தலைமை ஆசிரியர், கொலை மிரட்டலும் விடுத்து இருக்கிறார். தன் மீதான புகாரை மறைக்க பஞ்சாயத்துக்கும் ஏற்பாடு செய்து காய்களை நகர்த்தி இருக்கிறார்.
தற்போது இப்புகார் குறித்த விசாரணை நடைபெற்று வரும் நிலையில், விரைவில் தலைமை ஆசிரியர் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 37 வயது பெண்ணை இரண்டு துண்டாக வெட்டிக்கொன்ற 60 வயது கிழவன்; பலாத்காரம் நிறைவேறாததால் கொடூரம்.!