கல்கி 2898 ஏடி படம் குறித்த முக்கிய அப்டேட் கொடுத்த இயக்குனர்; ரசிகர்கள் ஹேப்பி.!
"அம்மா கல்யாணம் வேண்டாம் மா" - சொல்லியும் கேட்காத பெற்றோர்.. விபரீத முடிவெடுத்த மகள்.!

பெற்றோர் தனது விருப்பத்திற்கு மாறாக முடிவெடுக்கிறார்கள் என ஆதங்கப்பட்டு மகள் தற்கொலை செய்துகொண்ட சோகம் நடந்துள்ளது.
ஆந்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள சித்தூர் மாவட்டத்தில் வசித்து வரும் பெண்மணி மைத்ரி (வயது 21). இவருக்கு உறவினர் ஒருவருடன் திருமணம் செய்ய பெற்றோர் முடிவெடுத்து இருக்கின்றனர்.
இதையும் படிங்க: குடும்பத் தகராறில் வெறிச்செயல்; மனைவி வெட்டிக்கொலை.!
இதனிடையே, மைத்ரிக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாத நிலையில், அவர் பெற்றோரிடம் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். ஆனால், பெற்றோர் நீ எப்படியேனும் திருமணம் செய்தாக வேண்டும் என கூறியுள்ளனர்.
இளம்பெண் தற்கொலை
வேறொரு வரனை பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இதனால் திருமணத்தில் விருப்பம் இல்லாத மைத்ரி, பெற்றோர் தம்மை கட்டாயப்படுத்துகிறார்கள் என்ற வருத்தத்தில், வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சித்தார்.
அவரை மீட்ட உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதித்தபோது, அங்கு மரணம் உறுதி செய்யப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தடுப்பு கம்பியில் விளையாட்டுத்தனம்; 3 வயது சிறுவன் மாடியில் இருந்து தவறி விழுந்து பலி.!