பெண் தாசில்தாரின் சொத்து மதிப்பு ரூ.50 கோடி? தோண்ட தோண்ட புதையலாக கிடைக்கும் சொத்துக்கள்.!



Hyderabad Tahsildar Bribery Case: Woman Officer's Assets Worth ₹50 Crore Under Scanner

அதிக லஞ்சம் வாங்கி சொத்து சேர்த்த பெண் தாசில்தார் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தாசில்தார்:

Hyderabad Woman Tahsildar Arrested: தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத், ஷமீர்பேட் தாசில்தாராக வேலை பார்த்து வருபவர் சரிதா. இவர் கடந்த மாதம் கோப்பு ஒன்றுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக ஏக்கருக்கு ரூ.1 லட்சம் என மொத்தமாக 30 ஏக்கருக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் கேட்டு இருக்கிறார். இந்த தொகைக்கான முன்பணமாக ரூ.2 லட்சம் பெற்றுக்கொள்ள வந்தபோது கையும் களவுமாக மாட்டிக்கொண்டார். 

இதையும் படிங்க: சென்னை போலீசாருக்கே அல்வா கொடுத்த இன்ஸ்பெக்டரின் உறவினர்.. குறைந்த விலையில் தங்கம் மோசடி.. சென்னையில் சம்பவம்.!

அசையும்-அசையா சொத்துக்கள்:

இதனைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சரிதாவின் சட்டவிரோத வருமானம் குறித்து விசாரித்து வந்தனர். அவரின் வீடு, அலுவலகத்தில் சோதனை நடந்தது. அப்போது, சரிதாவின் கழுத்தில் இருந்த 11.94 கேரட் வைர நகையின் மதிப்பு மட்டுமே ரூ.15 லட்சம் என்பது தெரியவந்தது. இவருக்கு சொந்தமாக 2.17 ஏக்கர் விவசாய நிலம், ஐதராபாத் நகரில் பல இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் இருந்துள்ளன.

Crime news

ரூ.50 கோடி சொத்து:

வீட்டில் நடந்த சோதனையில் ரூ.12 லட்சம் ரொக்கம், வங்கிக்கணக்கில் ரூ.38 லட்சம் இருப்பு, 2 கார்கள், ரூ.1 கோடி மதிப்புடைய தங்கம், வைர நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவரின் கார் மதிப்பு மட்டும் ரூ.6 கோடி ஆகும். பதிவின் அடிப்படையில் சரிதாவின் சொத்து மதிப்பு ரூ.50 கோடி வரை இருக்கலாம் என கூறப்படுகிறது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

இதையும் படிங்க: காதலால் கபளீகரம் செய்யப்பட்ட குடும்பம்.. அம்மா, அப்பா, தங்கை கொடூர கொலை.. ஆடம்பர வாழ்க்கை ஆசையால் பெருங்கொடூரம்.!