பார்த்து போங்க மக்களே...! டிப்பர் லாரி ஸ்கூட்டர் மீது மோதி தூக்கி வீசப்பட்டு துடிதுடித்து இறந்த வாலிபர்! அதிர்ச்சி வீடியோ...!!!



hyderabad-osmania-university-scooter-tipper-accident

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழக காவல் நிலையம் எதிரே பயங்கர சாலை விபத்து நிகழ்ந்துள்ளது. வேகமாக வந்த டிப்பர் லாரி, ஸ்கூட்டர் மீது மோதியதில் அதில் சென்ற வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்துக்குப் பிறகு லாரியை அங்கேயே நிறுத்திய ஓட்டுநர் தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்கூட்டர் மீது மோதிய டிப்பர் லாரி

உஸ்மானியா பல்கலைக்கழக காவல் நிலையம் எதிரே வழக்கம்போல் வாகனங்கள் சென்று கொண்டிருந்த நிலையில், வேகமாக வந்த டிப்பர் லாரி ஒன்று ஸ்கூட்டர் மீது திடீரென மோதியதாக கூறப்படுகிறது. மோதலின் வேகம் அதிகமாக இருந்ததால் ஸ்கூட்டரில் பயணித்த நபர் பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையும் படிங்க: நொடியில் இப்படி ஆச்சே... சாலையில் சண்டையிட்ட காளைகள்! அதை விரட்ட போய் தூக்கி வீசப்பட்ட பெண்...! பகீர் வீடியோ..!!!

விபத்துக்குப் பிறகு ஓட்டுநர் தப்பியோட்டம்

விபத்து நடந்ததும் டிப்பர் லாரியை ஓட்டுநர் நிறுத்தியுள்ளார். ஆனால், அடுத்த சில நிமிடங்களில் அங்கிருந்து தப்பி ஓடியதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உஸ்மானியா பல்கலைக்கழக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.

CCTV காட்சிகளை ஆய்வு செய்யும் போலீசார்

விபத்து நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். அதன் மூலம் தப்பியோடிய லாரி ஓட்டுநரின் அடையாளம் மற்றும் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. ஹைதராபாத் நகரில் அதிகரித்து வரும் சாலை விபத்துகளைத் தடுக்க ஓட்டுநர்கள் கூடுதல் கவனத்துடன் வாகனங்களை இயக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 

இதையும் படிங்க: வேலை முடிந்து வீட்டுக்கு போக கால் டாக்ஸிக்காக காத்திருந்த இளம்பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி! ஐடி நிறுவன வாசலில் நடந்த பயங்கரம்... பகீர் சம்பவம்..!!!