அடப்பாவமே... கொலையில் முடிந்த பிரியாணி தகராறு... ஹோட்டல் ஊழியர்களிடம் காவல்துறை தீவிர விசாரணை.!

அடப்பாவமே... கொலையில் முடிந்த பிரியாணி தகராறு... ஹோட்டல் ஊழியர்களிடம் காவல்துறை தீவிர விசாரணை.!


hyderabad-man-beaten-to-death-for-asking-excessive-of-r

பிரியாணிக்கு ரைத்தா கேட்ட நபர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக ஹோட்டல் ஊழியர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

தெலுங்கானா மாநில தலைநகரான ஹைதராபாத்தில் தான் இந்த சம்பவம் நடைபெற்று இருக்கிறது. அங்கு அமைந்துள்ள தனியார் ரெஸ்டாரண்டில் பிரியாணி சாப்பிடுவதற்காக லியாகத் என்ற நபர் சென்றிருக்கிறார். அப்போது ரைத்தா என அழைக்கப்படும் வெங்காய பச்சடியை அதிகமாக கேட்டதாக தெரிகிறது.

Indiaஇது தொடர்பாக ஓட்டல் ஊழியர்களுக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இந்த வாக்குவாதம் முற்றி கைகலப்பாகி ஹோட்டல் ஊழியர்கள் லியாகத்தை கடுமையாக தாக்கி இருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது.

Indiaஇந்த சம்பவம் தொடர்பாக ஓட்டலுக்குச் சென்ற காவல்துறையினர் இரு தரப்பினரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்துக் கொண்டிருந்தபோது லியாகத் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் ஹோட்டல் நிர்வாகத்தினரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.