ஆன்லைன் விளையாட்டால் வந்த விபரீதம்! லிவ் இன்ங் உறவில் உள்ளாசம்... காதலனும் காதலியும் போட்ட திட்டம்! ஆனால் கடைசியில் காத்திருந்த பெரிய டுவிஸ்ட் !!!



hyderabad-jubilee-hills-chain-snatching-arrest

ஹைதராபாத் நகரில் அதிகரித்து வரும் சங்கிலி பறிப்பு சம்பவங்கள் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து கேள்விகளை எழுப்பி வருகின்றன. குறிப்பாக தொழில்நுட்ப நகரமாக விளங்கும் பகுதிகளிலும் இதுபோன்ற குற்றங்கள் நடைபெறுவது கவலைக்குரியதாக பார்க்கப்படுகிறது.

பெண் மற்றும் காதலன் கைது

ஹைதராபாத் ஜூபிலி ஹில்ஸ் பகுதியில் மென்பொருள் பெண் பொறியாளரிடம் தங்கச் சங்கிலியை பறித்த வழக்கில் செசெட்டி ரேவதி (33) மற்றும் அவரது காதலன் நரேந்திரா (23) ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். ரேவதி ஆந்திர மாநிலம் காக்கிநாடாவைச் சேர்ந்தவர். கணவரைப் பிரிந்து ஹைதராபாத்தில் தனியாக வசித்து வந்துள்ளார்.

ஆன்லைன் விளையாட்டு காரணமான கடன்

விசாரணையில், ரேவதி ஆன்லைன் விளையாட்டு பழக்கத்திற்கும் சொகுசு வாழ்க்கைக்கும் அடிமையாகி, பெரும் கடன் சுமையில் சிக்கியிருந்தது தெரியவந்தது. இந்தக் கடனைத் தீர்க்கவே காதலனுடன் சேர்ந்து சங்கிலி பறிப்பு குற்றத்தில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: வயிறு வலிப்பதாக சொன்ன 16 வயது சிறுமி! ஹாஸ்பிடலுக்கு போனதும் காத்திருந்து பேரதிர்ச்சி! வாலிபரை வலைவீசி தேடும் போலீஸ்...

திட்டமிட்டு நடந்த திருட்டு

ரேவதியும், குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராபிடோ ஓட்டுநரான நரேந்திராவும் ஆன்லைன் கேம் மூலம் அறிமுகமாகி, சில மாதங்களாக லிவ்-இன் உறவில் இருந்துள்ளனர். சம்பவத்தன்று, டெலிவரி வேலைக்கு செல்கிறார்கள் போல நடித்து, ஜூபிலி ஹில்ஸ் சாலை எண் 44-ல் நடந்துசென்ற மானசா என்ற பெண்ணை குறிவைத்து பின்தொடர்ந்தனர். பின்னர் ஆள் நடமாட்டம் குறைந்த நேரத்தில் 1.5 சவரன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பினர்.

சிசிடிவி மூலம் சிக்கினர்

பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், ஜூபிலி ஹில்ஸ் போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை கண்டுபிடித்தனர். ஆந்திர எல்லை வழியாக தப்ப முயன்ற இருவரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து தங்கச் சங்கிலி, ஸ்கூட்டி மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

இந்தச் சம்பவம், வேகமாக பரவி வரும் டிஜிட்டல் பழக்கங்கள் மற்றும் அதனால் உருவாகும் பொருளாதார சிக்கல்கள் எவ்வாறு குற்றச் செயல்களுக்கு வழிவகுக்கின்றன என்பதை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியுள்ளது. பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதையும் போலீசார் வலியுறுத்தியுள்ளனர்.

 

இதையும் படிங்க: மக்களே உஷார்! புதிய 500 ரூபாய் நோட்டில் இருக்கும் ஆபத்து...... வெளிவந்த முக்கிய எச்சரிக்கை!