ஃபிரீ ஃபையரில் தாயாரின் 36 லட்ச ரூபாயை காலி செய்த மகன்.! ஹைதராபாத்தில் அதிர்ச்சி சம்பவம்.!

ஃபிரீ ஃபையரில் தாயாரின் 36 லட்ச ரூபாயை காலி செய்த மகன்.! ஹைதராபாத்தில் அதிர்ச்சி சம்பவம்.!


hyderabad-boy-lost-the-money-of-36-lakhs-from-his-mothe

தெலுங்கானா மாநிலத் தலைநகரான ஹைதராபாத்தில் ஒரு சிறுவன் மொபைல் கேம் விளையாடியே தனது தாயாரின் வங்கி கணக்கிலிருந்த 36 லட்ச ரூபாயை செலவு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஹைதராபாத் நகரின் அம்பேத்பெட் பகுதியைச் சார்ந்த 16 வயது சிறுவன் ஒருவன்  இணையதள மொபைல் கேம்களுக்கு அடிமையாகி விளையாடி வந்திருக்கிறான். பிரீ பையர் என்ற கேமின் மீது பெரிதும் ஆர்வம் கொண்ட அந்த இளைஞன் தொடர்ச்சியாக அந்த விளையாட்டை விளையாடி உள்ளார்.

Telengana

அந்த விளையாட்டில் ஒரு லெவலில் இருந்து மற்றொரு லெவல் செல்வதற்காக சிறிது சிறிதாக பணத்தை செலவழிக்க துவங்கிய சிறுவன் ஒவ்வொரு ஆட்டத்தின் போதும் இதே மாதிரி பணத்தை செலவழிக்க துவங்கியிருக்கிறான்.

திடீரென அவனது தாயார் வங்கி கணக்கை சோதித்து பார்த்தபோது 36 லட்ச ரூபாய்  குறைவதை கண்டு அதிர்ச்சி அடைந்து இருக்கிறார். உடனடியாக அவர் வங்கியை தொடர்பு கொண்டு கேட்டபோது  மகன் கேம் விளையாடி தனது 36 லட்ச ரூபாயை செலவழித்தது தெரிய வந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கிறார் அந்த அப்பாவி தாய்.