இந்தியா

மனைவிக்கு என்ன குழந்தை பிறக்கும்!.? 7 மாத கர்ப்பிணி மனைவியின் வயிற்றை கிழித்த கொடூர கணவன்.!

Summary:

Husband tearing pregnant wife's stomach

உத்திரபிரதேசம் மாநிலம் புதான் பகுதியை சேர்ந்தவர் பன்னலால். இவருக்கு திருமணமான நிலையில் அந்த தம்பதிக்கு ஏற்கனவே 5 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், 6வதாக தனக்கு ஆண் குழந்தை வேண்டுமென்று கணவர் நினைத்துள்ளார். இதனையடுத்து மனைவி மீண்டும் கர்ப்பமடைந்துள்ளார். மனைவி கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் வயிற்றில் இருப்பது ஆண் குழந்தையா இல்லை பெண் குழந்தையா? என அப்பெண்ணின் கணவர் குழப்பத்தில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில்,  7 மாத கர்ப்பிணியாக இருந்த தனது மனைவியின் வயிற்றை கூர்மையான ஆயுதத்தை கொண்டு குத்தி கிழித்திருக்கிறார் கணவர்.வலியால் துடித்த அப்பெண் அலறல் சத்தம் போட்டுள்ளார். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

கர்ப்பிணியின் குடும்பத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்துள்ளனர். போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், தனக்கு பிறக்க இருக்கும் குழந்தை ஆணா..? பெண்ணா..? என்பதை தெரிந்துக்கொள்ளவே, இவ்வாறு செய்தேன் என தெரிவித்துள்ளார். இந்த கொடூரமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement