மனைவிக்கே தெரியாமல் அவரது கிட்னியை விற்ற கணவர்! பின்பு என்ன நடந்தது தெரியுமா?

மனைவிக்கே தெரியாமல் அவரது கிட்னியை விற்ற கணவர்! பின்பு என்ன நடந்தது தெரியுமா?


Husband sold his wifes kidney for money

வரதட்சணை. ஏழை பெண்களின் வாழக்கையில் மிக கொடுமையான ஒரு வார்த்தை இந்த வரதட்சனை. அந்தகாலங்களில் வரதட்சணை கொடுமையால் பல பெண்கள் பாதிக்கப்பட்டனர். ஆனால் நாகரிகம் வளர வளர இந்த வார்த்தையும் சற்று குறையவே தொடங்கியுள்ளது. ஆனால் ரிதா சர்கார் என்ற பெண்ணை அவரது கணவர், 2 லட்சம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பிரச்சனை காரணமாக தனது மனைவியின் கிட்னியை விற்க முடிவு செய்துள்ளார் அவரது கணவர். மஹாராஷ்டிரா மாநிலத்தில் நடந்துள்ளது இந்த சம்பவம்.

சில தினங்களுக்கு முன்பு வயிற்று வலி காரணமாக கணவருடன் மருத்துவமனைக்கு சோதனைக்கு சென்றுள்ளார்  ரிதா சர்கார். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட மருத்துவமனை  ரிதா சர்கார்கு குடல் இறங்கியுள்ளதாகவும், இதனால் கிட்னியை எடுக்க வேண்டும் என்று கூறி பனத்திருக்காக அவரது கிட்னியை எடுத்துள்ளார். இதற்கு  ரிதா சர்கார் கணவரும் உடந்தையாக இருந்துள்ளார்.

Husband sold his wife kidney

நடந்தது எதுவம் தெரியாத  ரிதா சர்கார் வீட்டிற்கு வந்துள்ளார். சிறிது நாட்கள் களைத்து மீண்டும் வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் தனியார் மருத்துவமனைக்கு சென்று சோதனை மேற்கொண்டதில், அவருடைய வயிற்றில் ஒரு கிட்னி இல்லை என்பது தெரியவந்தது. 

இதனால் அதிர்ச்சியடைந்த ரிதா சர்கார் காவல் நிலையத்தில் சென்று புகார் அளித்தார். இதனையடுத்து போலீஸார் தலைமறைவாக் இருந்த ரிதா சர்காரின் கணவனை கைது செய்து விசாரித்ததில், வரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்றதை ஒப்புக் கொண்டார். வரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.