"ஒரு நிமிட கோபம் வாழ்க்கையே போச்சு..." மனைவியை அடித்து கொன்ற ஐ.டி ஊழியர்.!! காவல்துறை விசாரணை.!!



husband-kills-wife-in-anger-plans-to-end-his-own-life

சம்பவம் நடந்த அன்று டெல்லி குருகிராம் பகுதியில் வசிக்கும் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் ஒரு நிபுணர் அவரது மனைவியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற கணவன், மனைவியை தாக்கியுள்ளார்.

இதனால் சம்பவ இடத்திலேயே மனைவி ரத்த வெள்ளத்தில் மிதந்து உயிரை விட்டார். கோபம் தணிந்து மனைவியிடம் நெருங்கிய கணவர் அவர் இறந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக தனது நெருங்கிய நண்பர் ஒருவருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு "நானே என் மனைவியை கொன்று விட்டேன் நானும் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன்"என கூறி குற்றத்தை ஒப்புக்கொண்டு இணைப்பை துண்டித்து விட்டார்.

India

இதைக் கேட்டு அதிர்ந்த நண்பர் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார். இதையறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்ணை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கே மயங்கிய நிலையில் இருந்த கணவரை மீட்டு, அவர் தற்கொலை முயற்சி செய்து கொண்டாரா.? அல்லது மன அழுத்தத்தில் இருந்தாரா.? என்று விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: போதையால் சீரழிந்த குடும்பம்... கணவனை போட்டுதள்ளிய மனைவி.!!! போலீஸ் விசாரணை.!!

இந்த தம்பதிக்கு இடையே நீண்ட நாட்களாக மனக்கசப்பு இருந்தது அக்கம்பக்கத்தினர் வாக்குமூலத்தின் அடிப்படையில் தெரிய வந்துள்ளது. தம்பதியின் மனக்கசப்பிற்கு காரணமென்ன.? என்பதை விசாரித்து வருகின்றனர். ஒரு நிமிட கோபம் ஒரு  குடும்பத்தையே அழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: துயரத்தில் முடிந்த சந்திப்பு... காதலியை கொன்று தற்கொலை செய்த காதலன்.!!