திருமணமான 4 மாதத்தில் புதுப்பெண் கொலை... விசாரணயில் அம்பலமான நாடகம்.!! கணவன், மாமியார் தலைமறைவு.!!



husband-kills-wife-flees-after-alleged-dowry-harrasment

கர்நாடக மாநிலம் பொலகாவி மாவட்டம் முதலகி என்ற பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் கும்பர். இவருக்கு சாக்ஷி (20) என்ற பெண்ணுடன் 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. திருமணம் நடந்த நாள் முதலே இருவருக்கும் இடையில் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது.

India

இந்நிலையில் கணவர் மனைவிக்குள்ளே வெறுப்பு அதிகமான நிலையில் மனைவியை ஆகாஷ் கொலை செய்து படுக்கையறையின்  கீழ் மறைத்து வைத்து நாடகமாடியுள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: "மாமியார் வீட்டில் உல்லாசம்..." மகள், காதலனை தீர்த்து கட்டிய தந்தை.!!

 

இதற்கடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் நீண்ட நாட்களாகவே வரதட்சணை கொடுமையால் தனது மகளை கொடுமை செய்தார்கள் எனவும் அவர்கள் கேட்டதற்கும் குறைவாக வரதட்சணை தந்ததால் கணவர் மற்றும் மாமியாரால் சாக்ஷி கடுமையான கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டார் என கூறியுள்ளனர்.

 

இதனையடுத்து கொலையாளியான ஆகாஷ் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்குரிய நீதி கிடைக்கப்படும் என போலீசார் வாக்குறுதி அளித்துள்ளனர். வரதட்சணை கொடுமையால் இன்னும் எத்தனை பெண்கள் கொல்லப்படுவார்கள் என்பது மிகவும் வருத்தத்தையளிக்கிறது.

இதையும் படிங்க: "உல்லாசத்திற்கு மறுத்த மனைவி அடித்துக் கொலை... " போலீசில் சரணடைந்த கணவன்.!!