"உல்லாசத்திற்கு மறுத்த மனைவி அடித்துக் கொலை... " போலீசில் சரணடைந்த கணவன்.!!



husband-invites-separated-wife-for-intimation-kills-her

கர்நாடக மாநிலம், யாதகிரி மாவட்டம் டோனிகரா பகுதியைச் சேர்ந்த மாரம்மா(35 ). இவர் கக்கேரா பகுதியைச் சேர்ந்த(40) வயது சங்கப்பாவை  கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் கடந்த 1 ஆண்டு காலமாக மனைவி மாரம்மா தாயார் வீட்டிலேயே தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் சுராப்புராவுக்கு வந்த சங்கப்பா தனது மனைவியை காண சென்றுள்ளார். அப்போது அவர் மனைவியை உடலுறவு கொள்ள அழைத்துள்ளார். ஆனால் இதனை முற்றிலும் மறுத்த மாரம்மா  விலகியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சங்கப்பா கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இறுதியில் அருகேயிருந்த கோடாரியை எடுத்து மாரம்மாவை பலமுறை வெட்டி தாக்கியுள்ளார்.

India

இந்த தாக்குதலில் சம்பவ இடத்திலேயே மாரம்மா ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். கோபம் தணிந்து சுயநினைவுக்கு வந்த சங்கப்பா தான் செய்த காரியத்தை அதிர்ச்சியில் உறைந்து அருகிலுள்ள போலீஸ் நிலையத்திற்கு சென்று தானாகவே சரணடைந்தார். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மாரம்மாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: போதையால் சீரழிந்த குடும்பம்... கணவனை போட்டுதள்ளிய மனைவி.!!! போலீஸ் விசாரணை.!!

மேலும் சங்கப்பாவின் மீது வழக்கு பதிவு செய்து சிறையிலடைத்தனர். சமீப காலமாகவே இதுபோன்று தம்பதியினருக்கிடையே போதுமான புரிதலின்றி நடக்கும் கொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: "இந்தப் பிள்ளைங்க எனக்கு பிறக்கல..." மனைவியின் மீது சந்தேகத்தால் விபரீதம்.!! 2 குழந்தைகள் அடித்து கொலை.!!