இந்தியா காதல் – உறவுகள்

ஆசையாக காதலித்து திருமணம்..! காதல் மனைவியின் செல்போனை கண்டு பேரதிர்ச்சியில் மூழ்கிய கணவர்.! பின்னர் துடிதுடிக்க நேர்ந்த விபரீதம்!

Summary:

Husband killed wife for doubt

ராஜஸ்தானில் வசித்து வந்தவர் அஜஸ் முகமது கான். இவர்தான் பணிபுரிந்த இடத்தில் நைனா மங்ளானி(நைனாவுக்கு ரேஷ்மா என்ற செல்ல பெயரும் உண்டு) என்ற பெண்ணை காதலித்துள்ளார். அதனைத் தொடர்ந்து இரு வீட்டார் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.  நைனா எப்பொழுதும் பேஸ்புக்கை அதிக அளவில் பயன்படுத்துபவர். மேலும் அவருக்கு ஏராளமான பாலோவர்கள் உள்ளனர். 

 மேலும் திருமணத்திற்கு பின்னரும் நைனா அவரது கணவருடன் நேரத்தை செலவிடாமல் எப்பொழுதும் செல்போனும் கையுமாகவே இருந்துள்ளார். அதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் முகமது  நைனாவின் செல்போனை எடுத்து பார்த்துள்ளார். அதில் பேஸ்புக் நண்பர்களுடன் தொடர்ந்து சாட்  செய்தும் வந்துள்ளார். இதுகுறித்து நைனாவிடம் கேட்ட நிலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, நைனா அவரது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். 

ஆனால் நைனா மீது கொண்ட காதலால் அவர் மீண்டும் அவரை தேடி சென்றுள்ளார். அதனை தொடர்ந்து இருவரும் ஒன்றாக பல இடங்களில் சுற்றியுள்ளனர். அப்பொழுதும் நைனா ஃபேஸ்புக் பயன்படுத்தியுள்ளார். இதுகுறித்து மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில் அவர் நைனாவை டெல்லி ஜெய்ப்பூர் ஹைவேஸ் சாலைக்கு அழைத்து சென்று கொடூரமாக தாக்கி கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். மேலும் மிகப்பெரிய கல்லை எடுத்து நைனாவின் முகத்தில் போட்டு விட்டு தப்பி சென்றுள்ளார்.

பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நைனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணைக்குப் பிறகு முகமதுவை கைது செய்தனர்.


Advertisement