தற்கொலைக்கு கணவனே காரணம்... உள்ளங்கையில் எழுதி வைத்து... தூக்கு போட்ட மனைவி..!
தற்கொலைக்கு கணவனே காரணம்... உள்ளங்கையில் எழுதி வைத்து... தூக்கு போட்ட மனைவி..!

தன்னுடைய சாவிற்கு கணவனே காரணம் என்று கைகளில் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட மனைவி.
குஜராத் மாநிலத்தில் சூரத் லிங்காயத் என்கிற பகுதியில் வசித்து வருபவர் பிரவீன் கோஸ்வாமி இவர் ரிக்ஷா ஓட்டி பிழைத்து வருகிறார். இவரது மனைவிக்கும் இவருக்கும் இடையே நிறைய பிரச்சனை இருந்து வந்துள்ளது.
பிரச்சனை அதிகமானதால் அவரது மனைவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.தற்கொலை செய்து கொண்ட அவரது மனைவி, தற்கொலைக்கான காரணத்தை தனது கைகளில் எழுதி வைத்துள்ளார். வாழவேண்டும் என்று ஆசை. ஆனால், கணவரின் கொடுமை தாங்கமுடியவில்லை என்று எழுதி வைத்துத்துள்ளார்.
இதை சூரத் நகர் காவல்துறையினர் பார்த்துவிட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான எட்டு வருடங்களில் அந்தப் பெண் இந்த மோசமான முடிவை எடுத்துள்ளார்.