மோகன்லால், பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள எல்2:எம்பூரான் திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு.!
கள்ளக் காதலியை மனைவியுடன் சேர்ந்து தீர்த்து கட்டிய கணவன்.. போலீசார் அதிரடி நடவடிக்கை.!
ஒடிசா மாநிலத்தில் உள்ள நபரங்குபூர் பகுதியை சேர்ந்தவர் சந்திர ராவுட். இவர் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த திலப்பதி கோந்த் என்ற இளம் பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதில் சந்திர ராவுட்டுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் உள்ள நிலையில், மறைத்து காதலித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் அந்தப் பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி சந்திர ராவுத்தை வற்புறுத்தியுள்ளார். இதனையடுத்து அவரது வீட்டிற்கே சென்று தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணவன் மனைவி அந்த பெண்ணுடன் சண்டையிட்டுள்ளனர்.
அப்போது கைகலப்பாக மாறிய நிலையில், அந்த பெண்ணை தாக்கியதில் கீழே விழுந்து உயிரிழந்தார். இதனையடுத்து உயிரிழந்த பெண்ணின் உடலை அப்பகுதியில் உள்ள காட்டிற்கு எடுத்துச் சென்று துண்டு துண்டாக வெட்டி ஒரு இடத்தில் புதைத்துள்ளனர்.
இந்த நிலையில் அந்தப் பகுதியில் ரத்த கரையை பார்த்த நபர் ஒருவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டதில் சந்திர ராவுட் மற்றும் அவரது மனைவியை கைது செய்துள்ளனர்.