இந்தியா

நாய்க்கு போடும் விஷ ஊசியை போட்டு கணவன் மற்றும் குழந்தைகளை கொன்ற பெண் மருத்துவர்! அதிர்ச்சி பின்னணி!

Summary:

Husband and two children kills by injecting dog poison in Gujarat

குஜராத் மாநிலத்தில் டிராஜ் ரானே என்பவரின் மனைவி மருத்துவர் சுஷ்மா. இந்த தம்பதியுடன் அவர்களின் மகன், ஐந்து வயது மகள் மற்றும் டிராஜ் ரானேயின் வளர்ப்பு தாய் பிரமிளா ஆகியோர் வசித்து வந்துள்ளனர். அவர்களது வீட்டில் இரு தினங்களுக்கு முன்பு காலை 8 மணியாகியும் வீட்டில் யாரும் எழுந்திருக்கவில்லை. இதனையடுத்து டிராஜ் ரானேயின் வளர்ப்பு தாய் பிரமிளாஎழுந்து பார்த்த போது, 4 பேரும் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். 

இதனையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இறந்து கிடந்த 4 பேரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் இறந்து கிடந்த படுக்கையில் ஒரு ‘சிரிஞ்’ மற்றும் தற்கொலைக் குறிப்பு கடிதம் இருந்தது.

சுஷ்மா மருத்துவமனைக்குச் சென்று வீட்டின் வளர்ப்பு நாய் தொடர்ந்து குரைத்துக் கொண்டே இருப்பதால், அந்த நாய்க்கு மயக்க மருந்து தேவை என்று கேட்டு, வீரியமிக்க மயக்க மருந்தை வாங்கி வீட்டிற்கு வந்த சுஷ்மா, தூங்கிக் கொண்டிருந்த கணவன், மகன், மகள் ஆகியோருக்கு விஷ ஊசி போட்டுள்ளார். பின்னர், அவரும் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என கூறப்படுகிறது.

சுஷ்மா எழுதி வைத்துள்ள தற்கொலைக் குறிப்பு கடிதத்தில், ‘தினமும் கொரோனா மரணங்களை பார்க்க முடியவில்லை அதனால் நாங்கள் அனைவரும் மரணத்தைத் தழுவுகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement