இந்தியா

திடீரென உடைந்து விழுந்த மிகப்பெரிய தண்ணி டேங்க்..! வெள்ளம்போல் வெளியேறிய தண்ணீர்.! வீடியோ காட்சி.!

Summary:

Huge water tank collapsed in west Bengal

மேற்குவங்க மாநிலத்தில் உள்ள மிகப்பெரிய தண்ணீர் தொட்டி உடைந்து, அதில் இருந்தே நீர் வெள்ளம் போல் வெளியேறிய வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது. மேற்குவங்க மாநிலத்தில் உள்ள பங்குரா சரீங்கா என்னும் பகுதியில் சுமார் 165 கோடி செலவில் இந்த தண்ணீர் தொட்டி கட்டப்பட்டுள்ளது.

2012 கட்டத் தொடங்கப்பட்டு, 2015-ல் இந்த தண்ணீர் தொட்டி கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த நீர்தேக்கத் தொட்டியில் 700 கியூபிக் மீட்டர் அளவுக்கு நீரைச் சேமித்து வைக்க முடியும். மேலும் இந்த தொட்டியின் மூலம், சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள 20 கிராமங்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது.

இந்நிலையில் தண்ணீர் தொட்டி பயன்பாட்டிற்கு திறக்கப்பட்ட சில மாதங்களிலையே தொட்டியில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்ட தொடங்கியுள்ளது. இதனை தொடர்ந்து தரமற்ற கட்டுமானத்தால் இந்த மிகப்பெரிய தேநீர் தொட்டி நேற்று திடீரென இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.


Advertisement