
Summary:
Huge Damage to one of iconic stadiums DY Patil stadium
மும்பையில் தொடரும் கன மழை காரணமாக அந்த பகுதியில் மிகுந்த பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. மும்பையில் புகழ்பெற்ற கிரிக்கெட் மைதானமான நெருல்லில் உள்ள டிஒய் படேல் மைதானம் மிகுந்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.
இதுகுறித்து மும்பை கமிஷனர் சஞ்சய் குமார் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் புகைப்படங்களுடன் பதிவிட்டுள்ளார். அதில்
மைதானத்தில் ஐபிஎல் இறுதிப்போட்டி, அன்டர் 17 ஃபிபா உலக கோப்பை உள்ளிட்ட முக்கிய போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், மைதானம் பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளதாக சஞ்சய் குமார் தெரிவித்துள்ளார்.
Huge Damage to one of iconic stadiums DY Patil stadium pic.twitter.com/9ILWJKGYNr
— Sanjay Kumar IPS (@sanjayips89) August 5, 2020
மும்பையில் சில நாட்களாக நிலவி வரும் தொடர் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டு மக்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றனர். மும்பை நகரின் பெரும்பாலான இடங்களில் மிகுந்த சேதம் ஏற்ப்பட்டுள்ளது. அதேபோல்
கனமழை மற்றும் சூறாவளி காரணமாக மும்பையில் உள்ள நெருல்லில் உள்ள டிஒய் படேல் மைதானம் மிகுந்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.
Advertisement
Advertisement