அடக்கொடுமையே.. இதற்காகவா இப்படி?? இரக்கமே இல்லாமல் தாய் செய்த கொடூர காரியம்.! துடிதுடித்து கதறிய 7 வயது சிறுவன்.!

அடக்கொடுமையே.. இதற்காகவா இப்படி?? இரக்கமே இல்லாமல் தாய் செய்த கொடூர காரியம்.! துடிதுடித்து கதறிய 7 வயது சிறுவன்.!


httpswwwgooglecomampswwwmaalaimalarcomampnewsdistrictta

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் குமுளி அருகே உள்ள அட்டப்பள்ளம் என்ற பகுதியில் 7 வயது சிறுவன் ஒருவன் தான் விளையாடுவதற்காக பக்கத்து வீட்டிலிருந்து இருசக்கர வாகன டயர் ஒன்றை எடுத்து வந்துள்ளார். மேலும் அதனை தனது வீட்டு வாசலில் போட்டு எரித்துள்ளார். அதனைக் கண்டு கோபமடைந்த சிறுவனின் தாயார் அவனை சாராமாரியாக அடித்துள்ளார்.

மேலும் இரும்பு கம்பியை பழுக்க காய வைத்து சிறுவனின் உடலில் பல இடங்களில் சூடு வைத்துள்ளார். அப்பொழுதும் கோபம் அடங்காத நிலையில் அவனது கண்களில் மிளகாய் பொடியை போட்டுள்ளார். இந்த நிலையில் சிறுவன் வலி, எரிச்சல் தாங்க முடியாமல் அலறி துடித்துள்ளார்.

arrest

 சிறுவன் பயங்கரமாக அழுதுக் கொண்டிருப்பதை கண்ட அவ்வழியே சென்ற பெண் ஒருவர் என்ன நடந்தது என கேட்டுள்ளார். அதற்கு சிறுவன் நடந்த அனைத்தையும் கூறிய நிலையில் அதிர்ச்சி அடைந்த அப்பெண் பஞ்சாயத்து உறுப்பினர் உள்ளிட்டோர் உதவியுடன் இதுக்குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். பின் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிறுவனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

மேலும் சிறுவனிடம் விசாரித்த போது தனது தாய் பலமுறை தனக்கு சூடு வைத்ததாகவும், கடுமையாக அடித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார் இதனை கேட்டு ஷாக்கான போலீசார் அவரது தாயாரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.