சமூக பரிமாற்ற நிலையில் ஒமிக்ரான் - SARS-CoV-2 மரபியல் கூட்டமைப்பு எச்சரிக்கை.!

சமூக பரிமாற்ற நிலையில் ஒமிக்ரான் - SARS-CoV-2 மரபியல் கூட்டமைப்பு எச்சரிக்கை.!


https://twitter.com/ANI/status/1485152687490744321

இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றான ஒமிக்ரான் வகை பரவி வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களில் வெவ்வேறு வகையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்திய மக்கள் மற்றொரு ஊரடங்கை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்ற அச்சத்தில் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில், INSACOG ஒமிக்ரான் வகை தொற்று குறித்து தெரிவிக்கையில், "ஓமிக்ரான் வைரஸ் தொற்று இந்தியாவில் சமூக பரிமாற்ற நிலையில் உள்ளது. இந்தியாவின் பல்வேறு பெருநகரங்களில் ஆதிக்கம் செலுத்தியுள்ளது" என தெரிவித்துள்ளது. இதனால் விரைவில் சமூக பரிமாற்ற நிலையில் உள்ள ஒமிக்ரான் வகை தொற்று, சமூக தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது. 

INSACOG

மக்கள் அரசின் கொரோனா வழிகாட்டுதலை கடைபிடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதை INSACOG உறுதி செய்துள்ளது. கொரோனா ஒமிக்ரான் வகை பரவல் அதிகரிக்கும் பட்சத்தில், மீண்டும் மக்கள் ஊரடங்கு உத்தரவுகளை எதிர்கொள்ளவேண்டிய கட்டாயமும் ஏற்படும். 

INSACOG - Indian SARS-CoV-2 Consortium on Genomics or Indian SARS-CoV-2 Genetics Consortium (இந்திய SARS-CoV-2 மரபியல் தொடர்பான கூட்டமைப்பு அல்லது இந்திய SARS-CoV-2 மரபியல் கூட்டமைப்பு).