தலை துண்டிக்கப்பட்டு பிறந்த குழந்தை; மருத்துவமனையில் நடந்தது என்ன!

தலை துண்டிக்கப்பட்டு பிறந்த குழந்தை; மருத்துவமனையில் நடந்தது என்ன!



how-the-baby-is-dead-in-rajasthan

ராஜஸ்தானில் பெண் ஒருவருக்கு குடிபோதையில் பிரசவம் பார்த்த மருத்துவமனை ஊழியர்களால் நடந்த விபரீத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலை துண்டிக்கப்பட்டு குழந்தை பிறந்ததற்கான காரணம் என்ன என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மார் மாவட்டம் ராம்காரை சேர்ந்தவர் திலோக்பதி. இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த தன்னுடைய மனைவி தீஷா கண்வரை ராம்நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதித்துள்ளார்.அந்த சமயத்தில் மருத்துவமனையில் எந்த மருத்துவர்களும் பெண் செவிலியர்களும் இல்லை.

எனவே ஆண் செவிலியர்களான அமிர்த்லால், ஜுன்ஜ்கார்சிங் ஆகியோர் அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்ப்பதாக கூறியுள்ளனர். மருத்துவர்கள் மருத்துவமனையில் இல்லாததால் இந்த இரண்டு ஆண் செவிலியர்களும் மது அருந்திவிட்டு போதையில் இருந்துள்ளனர். அதனைப் பற்றி அவர்கள் எந்த கவலையும் இல்லை அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்ப்பதற்கு தயாராகியுள்ளனர். 

பொதுவாக பிரசவத்தின் போது பெண்ணின் வயிற்றில் தலை தான் முதலில் வரும். ஆனால் இந்த பெண்ணுக்கு குழந்தையின் கால் முதலில் வெளிவந்துள்ளது. இதனால் குழந்தை வெளியில் வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அப்போது நல்ல போதையில் இருந்த அந்த இரண்டு ஆண் செவிலியர்களுக்கும் என்ன செய்வதென்று புரியவில்லை. இருப்பினும் அவர்கள் குழந்தையின் காலைப்பிடித்து இழுக்க முயற்சி செய்துள்ளனர். இவ்வாறு அவர்கள் குழந்தையின் காலைப்பிடித்து பலமாக இழுத்ததில் குழந்தையின் தலை துண்டிக்கப்பட்டு உடல் மட்டும் வெளியில் வந்துள்ளது.

rajasthan

இதனால் பதறிப்போன அவர்கள் குழந்தையின் உடலை பிரேத பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் அந்தப் பெண்ணின் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து ஜெய்ப்பூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்த மருத்துவர்களிடம் அந்த செவிலியர்கள் குழந்தையின் தலை துண்டாகி உள்ளே இருந்த விஷயத்தை மறைத்து பெண்ணிற்கு ஏற்கனவே குழந்தை பிறந்து விட்டதாகவும் நஞ்சுக்கொடி மட்டும் வெளியில் வராமல் இருக்கிறது என்றும் கூறியுள்ளனர்.

அங்கு பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் வயிற்றில் குழந்தையின் தலை மட்டும் இருப்பதை கண்டறிந்தனர். மேலும் அந்த பெண்ணுக்கு அங்கு சிகிச்சை அளிக்க போதிய வசதி இல்லாத காரணத்தினால் ஜோத்பூரில் உள்ள பெரிய மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அறுவை சிகிச்சை செய்து குழந்தையின் தலை வெளியே எடுக்கப்பட்டது. தீஷா கன்வர் ஆபத்தான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து பெண்னின் கணவர் திலோக்பதி அளித்த புகாரின் பேரில் ஆண் செவிலியர்கள் அமிர்த்லால், ஜுன்ஜ்கார்சிங் ஆகிய இருவர் மீதும் அஜாக்கிரதையாக சிகிச்சை அளித்து மரணத்தை ஏற்படுத்துதல், பாதுகாப்பற்ற முறையில் ஆபத்தான சிகிச்சை அளித்தல் ஆகிய பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.