இந்தியா

கொரானாவில் இருந்து தப்பிக்க மாட்டு கோமியத்தைக் குடித்த சம்பவம்..! இணையத்தில் வைரலாகும் வீடியோ.!

Summary:

Hindu maha saba members drunk cow urine to cure corono

கொரோனாவில் இருந்து தப்பிக்க, அகில பாரத இந்து மகா சபை நிர்வாகிகள் மாட்டு கோமியத்தை குடித்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைராலகிவருகிறது.

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கொரோனாவில் இருந்து பாதுகாத்துக்கொள்ள அரசும் பல்வேறு முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிக்க, மாட்டு கோமியத்தை பருகினால் வைரஸ் நம்மை தாக்காது என இந்து மகாசபை நிர்வாகிகள் கூறிவந்த நிலையில், இன்று டெல்லியில் அகில இந்திய இந்து மகாசபா நிர்வாகிகள் மாட்டு கோமியத்தை மருந்தாக அருந்திய சம்பவம் நடந்துள்ளது.

இந்த காட்சி வீடியோவாக வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.


Advertisement