இந்தியா

இந்தியாவின் தங்க மங்கைக்கு மாநில அரசு கொடுத்த வெகுமதி.!

Summary:

ஹிமா தாசு ஒரு இந்திய விரைவோட்ட வீராங்கனை ஆவார். அவர் IAAF உலக தடகள சாம்பியன்சிப் 20 வயதுக்

ஹிமா தாசு ஒரு இந்திய விரைவோட்ட வீராங்கனை ஆவார். அவர் IAAF உலக தடகள சாம்பியன்சிப் 20 வயதுக்குட்பட்டோர் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்தியர் ஆவார்.

20 வயதுக்குட்பட்டோர் உலக தடகள சாம்பியன் போட்டியில் இந்தியாவின் ஹிமா தாஸ் 400 மீட்டர் இறுதிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்தியர் ஆவார். இவர் IAAF உலக தடகள சாம்பியன்சிப் 20 வயதுக்குட்பட்டோர் போட்டியில் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார். 


சர்வதேச தடகளப் போட்டிகளில் இந்தியக் கொடியை ஏந்தியவாறு தலைநிமிர்ந்து வெற்றிச் சிரிப்போடு நிற்கும் இந்திய பெண்மணிக்கு பலதரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வந்தது.

இந்தநிலையில், அஸ்ஸாம் முதலமைச்சர் சர்பானந்தா தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அங்கு உலக சாம்பியன்ஷிப் ஸ்ப்ரிண்டர் ஹிமா தாஸை துணை போலீஸ் சூப்பிரண்டாக(DSP) நியமிக்க முடிவு செய்யப்பட்டது.


Advertisement