இந்தியா

நம்பவே முடியலையே.! 6 மணி நேரத்தில் இத்தனை முட்டைகளா.! ஆச்சர்யத்தில் மூழ்கடித்த அதிசயகோழி.!

Summary:

நம்பவே முடியலையே.! 6 மணி நேரத்தில் இத்தனை முட்டைகளா.! ஆச்சர்யத்தில் மூழ்கடித்த அதிசயகோழி.!

கேரள மாநிலம் ஆலப்புழா அருகேயுள்ளஅம்பலப்புழா என்ற பகுதியில் வசித்து வருபவர் பிஜுகுமார். இவர் கடந்த 7 மாதங்களுக்கு முன் 20க்கும் மேற்பட்ட கோழிகளை வாங்கி பண்ணை அமைத்து வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை அந்த கோழிகளுள் ஒன்று தனது காலை சற்று தூக்கி தூக்கி நடந்து கொண்டு இருந்துள்ளது.

மேலும் வித்தியாசமாக மண்ணை நோண்டிக்கொண்டும் இருந்துள்ளது. பின்னர் சிறிது நேரத்திற்கு பிறகு அந்த கோழி, தான் தோண்டிய மண்ணுக்குள் முட்டையை இட தொடங்கியுள்ளது. கோழி காலை 8.30 மணிளவில் ஒரு முட்டை போட்டது. பின்னர் சிறிது நேரத்திலேயே அடுத்தடுத்தாக தொடர்ந்து முட்டைகளை போட்டுகொண்டே இருந்துள்ளது. பிற்பகல் 2.30 மணிக்குதான் கோழி முட்டை போடுவதையே நிறுத்தியுள்ளது.

அதாவது கோழி 6 மணி நேரத்திற்குள் 24 முட்டைகளை போட்டுள்ளது. இந்த தகவல் அப்பகுதியில் தீயாய் பரவிய நிலையில் அந்த அதிசய கோழியை காண ஊர்மக்கள் பிஜுகுமார் வீட்டில் திரண்டுள்ளனர். மேலும் இந்த நிகழ்வு குறித்து திருச்சூரில் உள்ள கால்நடை பல்கலைக்கழக உதவி பேராசிரியர் கூறுகையில், ஒரு கோழி 6 மணிநேரத்தில் 24 முட்டைகளை போடுவது மிகவும் அதிசயமான சம்பவமாகும். இதற்கான காரணம் ஆராய்ச்சி மேற்கொண்ட பிறகே கூறமுடியும் என்று கூறியுள்ளார். இச்சம்பவம் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement