அய்யோ.. பாவம்..!! கேரளாவை மீண்டும் தாக்க வரும் கனமழை; பீதியில் மக்கள்



heavy rain predicted again in kerala

கடந்த மாதம் கேரளாவில் பெய்த கனமழையால் கேரளாவின் பெரும்பாலான மாவட்டங்கள் நீரில் மூழ்கின. கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி  350-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

பல்வேறு வகையில் வெள்ள நிவாரண நிதிகளை பெற்று இப்பொது தான் அங்கு சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. 

heavy-rain

இந்நிலையில் கேரளாவின் ஒரு சில மாவட்டங்களில் மீண்டும் தொடர் கனமழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக பத்தினம் திட்டம், இடுக்கி, வயநாடு, திரிசூர் ஆகிய 4 மாவட்டங்களிலும் செப்டம்பர் 25 மற்றும் 26 ஆகிய நாட்களில் கனமழை பெய்யும் என்றும் இந்த மழை பொழிவானது 64.4 மில்லி மீட்டரில் இருந்து 124.4 மில்லி மீட்டர் வரை இருக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

இதனால் இந்த நான்கு மாவட்டங்களுக்கும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கேரளா முதல்வர் பினராயி விஜயன் தனது த்விட்டேர் பக்கத்தில் மாநில பேரிடர் மேலாண்மை துறை விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.



இந்த செய்தியை கேட்டு கேரளா மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.